காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ஏற்றி தாக்குதல் நடந்தது எப்படி ?

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (174)
Advertisement
காஷ்மீர், பயங்கரவாதிகள், தாக்குதல்

புதுடில்லி: காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ஏற்றி நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறி வைத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Advertisementஇந்த தாக்குதல் சம்பவம் குறித்த விவரம் வருமாறு:காஷ்மீரில், ஸ்ரீநகர் நோக்கி 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ஒரு பயங்கரவாதி வெடிகுண்டுகாரை ஓட்டி வந்துள்ளான். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.


இந்த காரை ஓட்டி வந்தவன் அடில் அகமது எனவும், அவன் புல்வாமா மாவட்டம் காக்கிபோரா பகுதியை சேர்ந்தவன் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு தான் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளான். தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

இதுவே சமீபத்தில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய மோசமான தாக்குதல் ஆகும்.


தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு, தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்களின் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக கூறியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக சிஆர்பிஎப் தலைவரிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவரம் கேட்டறிந்தார்.


Advertisement
வாசகர் கருத்து (174)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinay - Toronto,கனடா
15-பிப்-201921:33:26 IST Report Abuse
Vinay அதிச்சியான சம்பவம், உடனடியாக பதிலடி தரப்பட வேண்டும், எப்படி 350 Kg வெடி குண்டுடன் அந்த வாகனம் சோதனை சாவடிகளை கடந்தது , கறுப்பாடுகள் கண்டு பிடிக்கப்பட்ட வேண்டும்...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
16-பிப்-201905:46:04 IST Report Abuse
Anandanஉளவுத்துறை, அமெரிக்கா எச்சரித்தும் ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? தேர்தல் காரணமோ?...
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
15-பிப்-201920:44:12 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்கனும். அப்போதான் நாடு உருப்படும், மக்கள் நிம்மதியாக வாழ முடியும். வீரர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவோம். ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
16-பிப்-201905:46:45 IST Report Abuse
Anandan350 கிலோ வெடிபொருட்கள் எப்படி வந்தது, உளவுத்துறை எச்சரித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? யாரு தூங்கினது?...
Rate this:
Share this comment
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
15-பிப்-201920:38:26 IST Report Abuse
Oru Indiyan Why Vaiko, Thiruma, Seeman and other fringe party leaders are quiet about this? They should be thrown out of India.
Rate this:
Share this comment
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
15-பிப்-201920:54:57 IST Report Abuse
தோலுரிப்பவன் ஏன்டா இப்ப கூட ஏன் உங்களுக்கு அவர்கள் நினைப்பு இதில் கூட அரசியலா அடங்குங்கடா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X