வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது: பிரதமர் மோடி

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (41)
Advertisement
புல்வாமா,தாக்குதல்,மோடி,ராஜ்நாத்சிங்,ஜெட்லி

புதுடில்லி : பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர். இதில் 42 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை


அதிர்ச்சி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் வேண்டி கொள்கிறேன் .
நாடே தோள் கொடுக்கும்:
Advertisement

பிரதமர் மோடி: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஒட்டு மொத்த நாடே தோள் கொடுக்கும். மேலும் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.
வீர வணக்கம்:
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி: காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம். இதற்குக் காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.காங்கிரஸ் தலைவர் ராகுல்:
கோழைத்தனமான தாக்குதலில், நமது தைரியமான சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததும், ஏராளமானோர் காயமடைந்ததும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடைந்தோர் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணம் அடைய வேண்டி கொள்கிறேன்.உள்துறை அமைச்சகம்: புல்வாமா தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர், காஷ்மீர் கவர்னர், சிஆர்பிஎப் இயக்குனர் ஜெனரலுடன் பேசியுள்ளார். அப்போது, இருவரும், காஷ்மீர் நிலவரம் குறித்து அமைச்சரிடம் விளக்கினர். பீஹாரில், நாளைய கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, உள்துறை அமைச்சர் காஷ்மீர் செல்கிறார். நிலைமையை உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கவலை
ரயில்வே அமைச்சர் கோயல்: காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதலில் நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தது மிகுந்த கவலை அளிக்கிறது. உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வேண்டும்.
சோகம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: புல்வாமாவில் 13 வீரர்கள் வீரமரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தைரியமான நமது வீரர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும். இதற்காக வேண்டி கொள்கிறேன்.

கண்டனம்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்: காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
சோகமான செய்தி
டில்லி முதல்வர் கெஜ்ரிவால்: புல்வாமாவில் இருந்து பெரிய அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. பலர் உயிர் இழக்க காரணமான தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.


கடும் கண்டனம்
தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா: காஷ்மீரிலிருந்து சோகமான செய்தி வந்துள்ளது. வெடிகுண்டு தாக்குதலில், ஏராளமான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டி கொள்கிறேன்.


வார்த்தைகள் இல்லை
மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி கூறுகையில், இந்த மோசமான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக உள்ளது என தெரியவில்லை.காங்., பொது செயலாளர் பிரியங்கா, 'புல்வாமா பயங்கரவாத தாக்குதல் துரதிருஷ்டவசமானது. தற்போதைய சூழலில் அரசியல் பற்றி பேசுவது சரியாக இருக்காது' எனக்கூறி செய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்தார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S GOPHALA - Chennai,இந்தியா
15-பிப்-201911:41:47 IST Report Abuse
R S GOPHALA அவனுங்களை ஒழிக்கவேண்டிய நேரம் வந்துடுச்சி. பொறுத்தது போதும் மோடி ஜி. பொங்கி எழுங்கள். உலக அரங்கில் இந்தியாவின் வலிமையை நிரூபிக்கவேண்டும். அவனுங்க அடங்கமாட்டானுங்க. ரத்தத்திற்கு ரத்தம் ஒன்றே பதில்.
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
15-பிப்-201909:23:59 IST Report Abuse
JIVAN உங்கள் வாய்சவடாலை மட்டுமே கேட்பதால் அருவருப்பாக இருக்கிறது, உளவுத்துறை உங்களை போல உல்லாசப்பயணம் சென்றுவிட்டதா என்ன.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
15-பிப்-201909:00:09 IST Report Abuse
ரத்தினம் ஓசி பிரியாணி தின்னுகிட்டு தீவிரவாதிகளை ஆதரிக்கும் அரசியல் சாக்கடைகள் இருக்கும் வரை இப்படித்தான் பலிகள் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X