பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் அவசர ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் அவசர ஆலோசனை

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (40)
Advertisement
crpf,attack,காஷ்மீர்,தாக்குதல்

புதுடில்லி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாளை(பிப்.,15) காலை 9.15 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.





இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் அவசர ஆலோசனை நடத்தினார்.




தாக்குதல் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.


என்.ஐ.ஏ., குழு:

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய புல்வாமா பகுதிக்கு என்.ஐ.ஏ குழு நாளை(பிப்.,15) செல்கிறது. ஐ.ஜி அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் 12 பேர் கொண்ட குழு விசாரணை நடத்த உள்ளது.





வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
15-பிப்-201916:39:14 IST Report Abuse
ரத்தினம் உளவுத்துறை, நாட்டுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் தேச துரோகிகளை உள்ளே போடணும்.
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
15-பிப்-201911:28:42 IST Report Abuse
R S GOPHALA பிரதமர் மோடி கண்டிப்பாக ஏதாவது செய்வார். அவர்களுக்கும் நமது வலி எப்படியிருக்கும் என்பதை புரிய வைப்பார். மறைந்திருந்து தாக்குபவர்கள் கோழைகள். தைரியமிருந்தால் நேருக்கு நேர் வர வேண்டும். மற்றவர்களின் தூண்டுதல் பெயரில் நடத்தப்படும் இம்மாதிரியான செயல்களுக்கு சற்று நிதானித்துதான் பதிலடி கொடுக்க வேண்டும். மோடி ஒன்றும் சும்மா பார்த்துக் கொண்டிருப்பவர் அல்ல. கண்டிப்பாக அடிப்பார். இது நடக்கும். வெகு விரைவிலேயே. தேர்தல் இப்போது முக்கியமல்ல. இறந்த நாற்பது பேருக்கும் ஆத்ம சாந்தி கிடைக்கும்படி கடுமையான பதிலடி தரவேண்டும். மோடி இதை செய்வார்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
15-பிப்-201911:08:13 IST Report Abuse
ganapati sb பாகிஸ்தான் வசமுள்ள காஸ்மீர் மற்றும் தனிநாடு கேட்கும் பலூச் உள்ளே நம் ராணுவம் சென்று அந்த பிரதேசம் முழுவதையும் நம் வசம் கொண்டு வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X