வடக்கில் வந்தது அதிக மகிழ்ச்சி!

Added : பிப் 15, 2019
Advertisement

'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என, ஒரு காலத்தில், திராவிடக் கட்சிகளுக்கு உதவிய வாசகம், சென்னை வடக்குப் பகுதி வாழ் மக்களை மகிழ வைக்கும், 'மெட்ரோ ரயில் சேவை'
வாயிலாக உண்மையாகி இருக்கிறது!
சென்னையில் டிராம் சர்வீசிற்கு பின், புறநகர் ரயில் சேவை, அதற்கு பின் ராஜா அண்ணாமலை புரம் வரை செல்லும், 'பறக்கும் ரயில் சேவை' என்ற மாற்றங்கள், 40 ஆண்டுகளில் இந்த நகரின், 'மெட்ரோ அணுகுமுறை'க்கு எடுத்துக்காட்டு.
இன்றைய பார்வையில், மெட்ரோ ரயிலுக்கு அதிக கட்டணம் இருந்தாலும், அதிக வசதிகளையும், நிறைவான பயணத்தையும் தரவல்லது. அதிக மக்கள் பயன்படுத்தும், கோயம்பேடு
பஸ் நிலையத்திற்கான சேவை முக்கியத்துவம் பெறுவதுடன், விமான நிலையத்திற்குச்
செல்வோர் விரும்பும் நல்ல பயணமாக மாறும்.
அது மட்டும் அல்ல; மற்ற சர்வீஸ்கள் மூலம் ஆகும் காலவிரயம் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் மாசின்மை ஆகியவை இந்த சர்வீஸ் மூலம் மக்களுக்கு கிடைக்கும்.
இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதல்
கட்டம் என்று பெயர். மொத்தம், 45 கி.மீ., தொலைவுக்கு கிட்டத்தட்ட, 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைந்திருக்கிறது. மொத்தமுள்ள, 32 ரயில் நிலையங்களில், 19 நிலையங்கள்,
சுரங்கப் பாதையிலும் அமைந்திருக்கிறது.
இதில் மத்திய அரசு உதவி, சில கடனுதவிகள் மூலம் நிறைவேற்றப்பட்ட இத்திட்டம், சென்னைப் பெருநகரின் மாண்பை அதிகரிக்கும். சில நேரங்களில், சென்னையின் பெரிய போக்குவரத்து சாலைகளில், சில சக்திகளின் அவசர ஆர்ப்பாட்டம் அல்லது வேறு சில அசம்பாவிதங்களால், போக்குவரத்து முடங்கும் போது, இச்சேவை, பல ஆயிரக்கணக்கான மக்களை, தங்கள் இலக்கை அடைய சுலப வழிகாட்டும்.
இப்பணியின், இரண்டாவது கட்ட தொடர்ச்சியை நடத்த, அரசு விரும்புவது நல்ல தகவல். ஆனால் இந்த முதல்கட்ட பணிகள் ஆரம்பித்து, சிறுகச் சிறுக வேலை நடந்ததால், சென்னையின் இதயப்பகுதியான, அண்ணாசாலை சுருங்கி, ஒரு வழிப்பாதையாகி, பல ஆண்டுகளாகி விட்டது.
ஆனால், நல்ல வேளையாக இந்த மாதிரி இப்பாதை சுருங்கியது தவறு என்றும், எதற்கு மெட்ரோ ரயில் என்று எந்த அமைப்பும் கூறாமல், 10 ஆண்டுகளாக மவுனம் காத்தது, ஒரு வியப்பான சம்பவம் என்றே கூறலாம்.
இந்த சேவையை மெட்ரோ ரயில் துவக்கி, அதில், நான்கு நாளைக்கு இலவசப் பயணம் என்ற அறிவிப்பு, பலர் எளிதாக அதில் பயணித்து,
தங்கள் அனுபவத்தை பகிர்வதின் மூலம் இதில் பயணிப்போர் எண்ணிக்கை எளிதாக அதிமாகும்.
ஆனால், மற்ற சர்வீசை விட கட்டணம் அதிகம்
என்றாலும், எதிலும் இலவசம் என்ற மாயை நீங்கி வரும் காலத்தில் இதை எதிர்ப்போர் கூட்டம் குறையும். தவிரவும் இம்மாதிரி மாநகர மெட்ரோ உருவாக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பொறியாளர், ஸ்ரீதரன், 'இன்றைய நிலையில்
இக்கட்டணங்கள் அதிகமில்லை' என்கிறார்.
மேலும் அவர், இத்திட்டங்களுக்கான செலவு மற்றும் பராமரிப்பு உட்பட வருங்கால செலவினங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டால், இதனால், 'லாபமும் இருக்காது: அதிக இழப்புக்கும்
வாய்ப்பில்லை' என்று கூறியிருக்கிறார்.
அதே சமயம், இந்த சர்வீஸ், அண்ணாசலை உட்பட பல இடங்களில், இணைப்பாக இருப்பதற்கு வசதியாக, அரசு பஸ்கள் இணைப்பு வசதி,
அதிரடி கட்டணம் அற்ற ஆட்டோ அல்லது மாஜிக் ெவள்ளை வண்டி வசதிகளை, முற்றிலும் புதிய கண்ணோட்டத்துடன் அணுக, அரசு செயலாக்கம் மேற்கொள்ள வேண்டும்
சொல்லப் போனால் இத்திட்டம் நம் தலைநகரின் கனவுத் திட்டம். அதிக கால தாமதத்தில், நனவாகி இருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றிய தலைமைப் பொறியாளர், ராமநாதன், இத்திட்டத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகளில் எடுக்கப்பட்ட மண், ஒன்பது லட்சம் லாரி டிரிப்புகளில் வெளியேற்றப்பட்டதாகவும், 25 ஆயிரம் தொழிலாளர்கள், இரவு பகலாக உழைத்தனர் எனத் தெரிவித்த கருத்தை, இதில் பயணிப்போர் அறிய வாய்ப்பில்லை.
ஆனால், ஜெர்மனி போல, இங்கிலாந்து போல, நம்மூரிலும் வசதி வாய்ந்த ஒரு சர்வீஸ் வந்திருப்பதை உணர்ந்து, அதன் சுற்றுத் துாய்மை மற்றும் சிறப்பு, நமது செயல்களால் பாதிக்காமல்
பாதுகாப்பது அவசியம்.
ஏனெனில் புறநகர் ரயில் சர்வீஸ், குறைந்த
கட்டண பஸ் சர்வீஸ் ஆகியவற்றில், சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பலர், தங்கள் இஷ்டப்படி நடப்பதும், திருட்டு கும்பல் பயணமும், அவைகளை கண்காணிக்க போலீசார் பற்றாக்குறை
உள்ளதையும், அனைவரும் அறிவர். இந்த
சர்வீசில், அக்குறைகள் ஏற்படாதவாறு
கண்காணித்தால், சென்னை மாநகர், மற்றொரு கவுரவம் கிடைத்த பெருமையைப் பெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X