கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடை நடவடிக்கைக்கு வரவேற்பு உயர்நீதிமன்றம்

Added : பிப் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மதுரை:'பிளாஸ்டிக் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது' என கருத்து வெளியிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஜூனில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இதன்படி 2019 ஜன.1 முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. பிளக்ஸ் பிளாஸ்டிக் பேனர் பற்றி அரசாணையில் குறிப்பிடவில்லை. எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தவிர்ப்பது என தெளிவற்ற நிலையில் அரசாணை உள்ளது.

பால் பாக்கெட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் பாக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் மூலம் பேக்கிங் செய்து பொருட்கள் இறக்குமதியாகின்றன. அதுபற்றி அரசாணையில் தெளிவுபடுத்தவில்லை.கேரளாவில் பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அம்மாநில அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது.

அதுபோல் அரசாணையில் உள்ள குறைபாடுகளை களைய தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் வகையில் ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன் எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்: பிளாஸ்டிக் தடை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டப்படி மூன்றுமுறை அபராதம் விதிக்கப்படும். நான்காவது முறை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.நீதிபதிகள்: பிளாஸ்டிக் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது. அனைத்துவகை பிளாஸ்டிக்குகளையும் தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மனுதாரர் இதற்கு முன் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை தாக்கல் செய்ததில் சந்தேகம் எழுகிறது. மனுதாரர் கோருவதுபோல் குழு அமைத்தால் அரசின் நடவடிக்கைக்கு தொய்வு ஏற்படுத்தும் என கருத்தை வெளியிட்டனர். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
15-பிப்-201921:51:50 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN சும்மா சட்டத்தை மட்டும் போட்டுட்டு இருந்தால் பயனேதும் இல்லை. உற்பத்தி செய்வோரை தடை செய்யனும் .சட்டத்தை யாரும் மதித்து நடக்க விரும்ப வில்லை. அப்படி பட்ட ஆட்சி நடக்குதுன்னு வெட்கப்பட வேண்டி யுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X