பொது செய்தி

இந்தியா

எதிரிகள் மிகப் பெரிய விலையை கொடுப்பார்கள் : மோடி

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (79)
Share
Advertisement
புதுடில்லி : புல்வாமா தாக்குதலுக்காக எதிரிகள் மிகப் பெரிய விலையை கொடுப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டில்லியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் விழாவில் பேசிய மோடி,

புதுடில்லி : புல்வாமா தாக்குதலுக்காக எதிரிகள் மிகப் பெரிய விலையை கொடுப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



latest tamil news



டில்லியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் விழாவில் பேசிய மோடி, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது அஞ்சலி. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.


latest tamil news



அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளன. இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு ஒன்றிணைந்து நிற்கிறது. நாடு தற்போது மிகவும் கோபமாக உள்ளது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் ரத்தமும் கொதித்து போய் உள்ளது. இந்த செயலுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும். பாக்., மிகப் பெரிய தவறு செய்து விட்டது. இதற்கு மிகப் பெரிய விலையை பாக்., கொடுக்கும். இனி பாக்., எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியை சந்திக்கும். இந்தியாவின் ஸ்திரதன்மையை இது போன்ற தாக்குதல்கள் பாதிக்காது.


latest tamil news


எதிர்க்கட்சிகள் இந்த தாக்குதலை அரசியல் ஆக்க வேண்டாம். வேற்றுமையை மறந்து பயங்கரவாதிகளை ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் பொருத்துக் கொள்ளாது. சதி செய்து இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாக்.,ன் கனவு ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-பிப்-201903:53:49 IST Report Abuse
meenakshisundaram பாக் கிக்கு தக்க பதிலடி கொடுக்கவேணும் மோடி அவர்களே மீண்டும் பிரதமரா வேண்டும்.
Rate this:
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
15-பிப்-201919:06:17 IST Report Abuse
ravichandran அடிங்க பலமா அடிங்க எதிரி எழ முடியாமல் அடிங்க அது தான் இப்போனமைக்கு தேவையான மருந்து
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
15-பிப்-201919:06:11 IST Report Abuse
Vijay D Ratnam இஸ்லாமிய பயங்கரவாதிகளை வேட்டையாடுவது என்பது நமது ராணுவத்துக்கு ஒரு மேட்டரே அல்ல. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள துரோகிகளை இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவாளர்களை கண்டுபிடித்து ஆஃப் த ரெக்கார்ட் கருவருக்கவேண்டும். பிரதமர் அவர்களே மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் அரசியல்கட்சிகள்தான் அவர்கள் வாக்குகள் வராதே என்று எந்த ஆக்ஷனும் எடுக்காது. நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் உங்களுக்கு அந்த பதினைந்து சதவிகிதத்தில் ஒருத்தர் கூட ஒட்டு போடமாட்டார்கள். அதிரடி நடவடிக்கையை எடுங்கள். எண்பத்தைந்து சதவிகிதத்தில் சூடு சொரணை உள்ள அறுபது சதவிகிதத்தினர் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம் மோடிஜி.
Rate this:
Sangeedamo - Karaikal,இந்தியா
16-பிப்-201915:04:29 IST Report Abuse
Sangeedamoஅருமை.... ரத்னம் அவர்கள் சொல்வது உண்மை சூடு சோரனை உள்ள அனைத்து ஹிந்துக்கள் மட்டும் அல்ல, உண்மையான தேச பற்றுள்ள யாவரும் உங்கள் பக்கம்தான் மோடிஜி... துணிந்து முடிவெடுங்கள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X