பொது செய்தி

இந்தியா

பாக்.,ன் வர்த்தக அந்தஸ்து ரத்து : இந்தியா

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி : புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாக்., உடனான வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில்

புதுடில்லி : புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாக்., உடனான வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.



latest tamil news


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்த மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அதிக அளவிலான சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகி உள்ளனர். பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு துறை எடுக்கும்.


latest tamil news


சர்வதேச அரங்கில் பாக்.,ஐ தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்கும். பாக்.,ஐ தனிமைப்படுத்த வேண்டும். தாக்குதலுக்கு காரணமானவர்கள் உரிய விலை கொடுப்பதை பாதுகாப்பு படை வீரர்கள் உறுதி செய்வார்கள். வர்த்தக ரீதியிலான எந்த சலுகையும் இந்தியாவிலிருந்து பாக்.,க்கு அளிக்கப்படாது. பாக்.,க்கு அளிக்கப்பட்ட வர்த்தக அந்தஸ்து திரும்பப் பெறப்படுகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-201921:20:06 IST Report Abuse
ஆப்பு நாமளே அவிங்களை தனிமைப் படுத்த எதுவும் பெருசா செய்யலை. முதல்லே பக்கிகளுடன் கிரிக்கெட் உறவை நிறுத்துங்கள். பாகிஸ்தான் தூதரகத்தை ஒரு 10 நாளைக்காவது மூடிட்டு, அவிங்களையும் வெளியேற்றுங்க.
Rate this:
Cancel
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
15-பிப்-201919:11:55 IST Report Abuse
Bebeto ஆனால், இங்குள்ள பாக்கிஸ்தான் ஆதரவு காட்சிகள் ஓட்டுக்காக அவர்களை ஆதரிப்பார்கள். இந்த மாதிரி அரசியல் காட்சிகள், பத்திரிகைகள், மீடியாக்கள் ஆகியவற்றை சரியாக கவனித்தால், இனி இந்த மாதிரி நடக்காது
Rate this:
Cancel
poonguzhali - singapore,சிங்கப்பூர்
15-பிப்-201917:44:26 IST Report Abuse
poonguzhali வலுவிழக்க செய்யும் சரியான ஆயுதம் பொருளாதாரமே... அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு வேண்டுகோள். தவறியும் பேங்க் அன்றி வேறு வழியில் பணம் அனுப்ப வேண்டாம். ஹவாலா பணமே பெரும்பாலும் இதுபோன்ற துர் செயல்களுக்கு பயன்படுத்த படுகிறது. ஆயுதம் கொண்டு போர் செய்தால் அமைதி குறையும்..... ஆக்கப்பூர்வமாக தனிமைப்படுத்துவோம்... இன்னுமொரு சோமாலியாவாக பாகிஸ்தான் தானே மாறிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X