கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசின் ரூ.2000 நிதி; எதிரான மனு தள்ளுபடி

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

சென்னை : ஏழை தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.latest tamil newsகடந்த வாரம் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி, கஜா புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஏழை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் 60 லட்சம் ஏழை தொழிலாளர்கள் குடும்பங்கள் பயன்பெறும் எனவும், இதற்காக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்தார். ரூ.2000 வழங்குவதற்கான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என முதல்வர் தெரிவித்தார்.


latest tamil newsஇந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்தும், இதற்கு தடை விதிக்க கோரியும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலை மனதில் வைத்தே இந்த பணம் கொடுக்கப்படுவதாகவும், அரசு பணம் வீணடிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ரூ.2000 வழங்குவது சரியானது தான். அரசின் கொள்கை முடிவுகளில் கோர்ட் தலையிட முடியாது. மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த சரியான புள்ளிவிபரத்தை குறிப்பிட்டு மனுதாரர் குறிப்பிடவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
15-பிப்-201916:35:41 IST Report Abuse
Raj Expected order only. Because, central Govt has announced Rs.6000/- per farmer and so the court can't take a different stand if a case comes against the central Govt. Anyway, major part of the Rs.2000/- will come back to the Government through TASMAC from these BPL families. Two mangoes in one stone for the TN Govt.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-பிப்-201915:04:42 IST Report Abuse
Bhaskaran தேர்தல் முடிந்தவுடன் இந்த திட்டம் நீட்டிக்கப்படுமா என்பது ஐயம்தான்
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
15-பிப்-201914:54:39 IST Report Abuse
தமிழர்நீதி இதுக்கெல்லாம் கனம் கோர்ட்டாருக்கு யோசிக்க சிரமம்தான் . சாராயக்கடை எல்லாம் திறப்பது அதுல குடிச்சி பணத்தையும் சுகத்தையும் இழப்பது எல்லாம் கண்ணுக்கு தெரியாது கனம் கோர்ட்டாருக்கு, இதெல்லாம் அரசின் கொள்கை முடிவு . அதுபோலத்தான் இதுவும் , பணத்தை வாரிபோட்டு வாங்கி அதை திட்டமாக , கல்லூரியாக ,குளமாக , வேலயாக மாற்ற தெரியாத அரசினை தூக்கிவீசனம் கனம் கோர்ட்டாருக்கு அவர்களே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X