பொது செய்தி

இந்தியா

பாக்., தூதரை அழைத்து இந்தியா கண்டிப்பு

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாக்., தூதரை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவிற்கான பாக்., தூதர்

புதுடில்லி : புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாக்., தூதரை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.



latest tamil news


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவிற்கான பாக்., தூதர் சோஹைல் முகம்மதுவிற்கு வெளியுறவுத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் நேரில் ஆஜரான பாக்., தூதரிடம், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


latest tamil news



தொடர்ந்து பாக்., தூதரிடம், ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக பாக்., உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாக்.,ல் செயல்படும் பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாதத்தை பரப்பும் தனிநபர்களையும் தடுக்க வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாக்., காரணம் இல்லை என நேற்று பாக்., வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட கருத்தையும் ஏற்க விஜய் கோகலே மறுத்து விட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.k.tharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-201921:12:59 IST Report Abuse
D.k.tharan கண்டித்துவிட்டால் போதுமா ???? பாக்கிஸ்தான் தூதரை கண்டிப்பது காலம் காலமாக நடப்பதுதானே .. எந்த பயனும் இல்லை கண்டிப்பதால் .மற்ற நாட்டுக்காரன் ஒரு மனிதனை தொட முடியுமா அவனது நாடு விட்டுவிடுமா என்ன எதோ போகுது எல்லாம் மக்கள் கொண்டுவரும் அரசு தானே
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
15-பிப்-201920:55:14 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி கம்பு குச்சீ வச்சி ரெண்டு அடி கொடுத்திருக்கலமில்ல
Rate this:
Kumar - Chennai,இந்தியா
16-பிப்-201901:36:55 IST Report Abuse
Kumarசூப்பர் கமெண்ட். திருநெல்வேலி பாஷை கொப்புளிக்குது....
Rate this:
Cancel
Indian - salem,இந்தியா
15-பிப்-201920:52:10 IST Report Abuse
Indian நம்ம நாட்டுல இருக்குற ஸ்லீபெர்ஸெல்ஸ் ஒழிக்கணும்....அதுக்கு இந்தியாவிற்கு நல்ல ராணுவ பாதுகாப்பு அமைச்சகம் வேணும்...கட்சி தலைவர்கள் நாட்டை பற்றி கவலைப்படாமல்...அடுத்தவர்களை குறை கூறி கொண்டிருக்கிறார்கள்... அது எப்படி...??? ராணுவத்தினர் போனது தீவிரவாதிகளுக்கு தெரிஞ்சுச்சு....விசாரணை கமிஷன் அமைக்கும்...வீர மரணம் adaintha ராணுவ வீரர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்....ஜெயஹிந்த் india.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X