புதுடில்லி: பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை டில்லிக்கு வருமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது கார் ஏற்றி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு கண்டனம் எழுந்துள்ளது.

அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காஷ்மீரில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அஜய்பிசாரியாவை டில்லி வருமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் உள்ள பாகிஸ்தான் கமிஷன் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இதற்கிடையில் , ஜம்மு காஷ்மீரில் முழுக்கடை அடைப்பு நடந்தது. பல இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பல வாகனங்கள் தீக்கிரையாகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE