மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 'டுவென்டி-20', ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடி ரோகித், தவான், தோனி உள்ளிட்ட யாருக்கும் ஓய்வு தரப்படவில்லை. உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் கோஹ்லி தலைமையில் முழு படையும் அப்படியே களமிறங்குகிறது.
இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு 'டுவென்டி-20', ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் பிப். 24, 27ல் 'டுவென்டி-20' போட்டிகள் விசாகப்பட்டனம், பெங்களூருவில் நடக்கின்றன. மார்ச் 2 முதல் ஒருநாள் தொடர் துவங்குகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய அணி குறித்த அறிவிப்பு வெளியானது.

'டுவென்டி-20' அணி:
கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யா, விஜய் ஷங்கர், சகால், பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயங்க் மார்க்ண்டே
முதல் இரு ஒரு நாள் போட்டிக்கான அணி:
கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் , தோனி, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது ஷமி, சகால், குல்தீப், விஜய் ஷங்கர், ரிஷாப் பன்ட், சித்தார்த் கவுல், லோகேஷ் ராகுல்.
கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணி:
கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் , தோனி, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, புவனேஷ்வர் குமார், சகால், குல்தீப், முகமது ஷமி, விஜய் ஷங்கர், ரிஷாப் பன்ட், லோகேஷ் ராகுல்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE