பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: அரசு முறை பயணமாக தென் கொரியா செல்லும் பிரதமர் மோடிக்கு பிப்., 22ம் தேதி சியோல் அமைதி விருது வழங்கப்பட உள்ளது.இரண்டு நாள் அரசு முறை பயணமாக வரும் 21ம் தேதி பிரதமர் மோடி தென் கொரியா செல்கிறார். அவரது இப்பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் மூன் ஜேயை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்நாட்டு தொழிலதிபர்கள் மற்றும்
பிரதமர்,மோடி,சியோல்,அமைதி_விருது

புதுடில்லி: அரசு முறை பயணமாக தென் கொரியா செல்லும் பிரதமர் மோடிக்கு பிப்., 22ம் தேதி சியோல் அமைதி விருது வழங்கப்பட உள்ளது.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக வரும் 21ம் தேதி பிரதமர் மோடி தென் கொரியா செல்கிறார். அவரது இப்பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் மூன் ஜேயை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


latest tamil news



தேசிய மற்றும் சர்வதேச அளவில் வளர்ச்சிக்கு சிறந்த பங்களித்ததற்காக பிரதமர் மோடிக்கு, சியோல் அமைதி விருது வழங்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியாவில் வரும் 22ம் தேதி பிரதமர் மோடிக்கு, சியோல் அமைதி விருது வழங்கப்படுகிறது. இந்திய - கொரிய தொழிற்துறை அமைப்பிலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

தேர்தல் நெருங்குவதால், பிரதமர் மோடியின் கடைசி வெளிநாட்டுப்பயணம் இதுவாகவே இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-பிப்-201916:05:58 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நல்லவருக்கு நல்ல விருது
Rate this:
Cancel
கோமாளி - erode,இந்தியா
15-பிப்-201923:34:28 IST Report Abuse
கோமாளி உள்ளூர்ல இருக்குற பல தீவிரவாதிகள விட்டு வெச்சதுக்கு குடுத்திருப்பாங்க.. இங்க தான் குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கானுக பாருங்க
Rate this:
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
15-பிப்-201922:43:32 IST Report Abuse
தமிழ்மைந்தன் சென்ற ஐநா கூட்டத்தில் ஊழலுக்கு விருது கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாம்.....ஆனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த விருதுகள் எப்பவுமே திமுக மற்றும் காங்கிரஸ் குடும்ப கட்சிகளுக்கே கிடைக்கும் என்பதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X