'சோலார்' மின்சாரம் : வாரியம் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சோலார்' மின்சாரம் : வாரியம் தீவிரம்

Added : பிப் 15, 2019
Advertisement

துணை மின் நிலையங்களில், 'சோலார்' எனப்படும், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் பணியை, மின் வாரியம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.மின் வாரியத்திற்கு சொந்தமாக, மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உள்ள காலி இடங்களில், சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரியசக்தி மின் நிலையங்களை, மின் வாரியம் அமைத்து வருகிறது.தற்போது, தர்மபுரி மாவட்டம், பாலவாடி துணை மின் நிலையத்தில், 50 கிலோ வாட்; அதே மாவட்டம், கரிமங்கலம் துணை மின் நிலையத்தில், 18 கி.வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மத்திய அலுவலகத்தில், 30 கி.வாட்; ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் செயற்பொறியாளர் அலுவலகங்களில், தலா, 10 கி.வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
- நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X