கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ.,க்கு அளித்த சிகிச்சை விசாரணை சரியே! : அப்பல்லோ வழக்கில் ஆறுமுகசாமி கமிஷன் பதில்

Added : பிப் 15, 2019
Advertisement

சென்னை: 'மறைந்த முதல்வர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிப்பது, விசாரணை கமிஷனின் வரம்புக்கு உட்பட்டது தான்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.ஜெ., மரணம் குறித்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில், அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்த மனு:ஜெ.,க்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை போதுமானதா; சரியானதா என்பது குறித்த, பொத்தாம் பொதுவான விசாரணையில், கமிஷன் இறங்கி உள்ளது. சிகிச்சை முறை பற்றி முடிவு செய்ய, விசாரணை கமிஷனுக்கு நிபுணத்துவம் கிடையாது.அப்பல்லோவுக்கு எதிராக, ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. வரம்பை மீறி விசாரணை கமிஷன் செயல்படுவதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா; போதுமானதா என்பது குறித்து நடந்த விசாரணை, சாட்சியங்கள் பதிவை ரத்து செய்ய வேண்டும். சிகிச்சை சரியானதா என்பது குறித்து விசாரிக்க, ஆறுமுகசாமி கமிஷனுக்கு தடை விதிக்க வேண்டும்.அறிக்கைசிகிச்சை சரியானதா என்பது குறித்து விசாரிக்கலாம் என்றால், சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய, தனி மருத்துவ குழுவை நியமித்து, குறித்த காலத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை கமிஷன் செயலர், எஸ்.கோமளா சார்பில், வழக்கறிஞர், ஆர்.விஜயகுமார் தாக்கல் செய்த மனு:விசாரணைக்கு தடை ஏற்படுத்தும் நோக்கில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை, பெரும்பாலும் முடிந்து விட்டது. சாட்சிகள் பலர் விசாரிக்கப்பட்டுள்ளனர். ஜெ.,க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில், பங்கு கொண்ட டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்களின் பட்டியலை, அப்பல்லோ மருத்துவமனை வழங்கியது.அவர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி, விசாரணை நடத்தப்பட்டது. தேவைப்படும் போது குறுக்கு விசாரணைக்கும், சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. வாய்மொழி சாட்சியம், ஆவண ஆதாரங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளது. சாட்சிகளை விசாரிக்க, மருத்துவமனை தரப்புக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.இதுவரை, மருத்துவமனை தரப்பிலோ, சசிகலா தரப்பிலோ, சாட்சிகள் பட்டியலை அளிக்கவில்லை. அனைத்து சாட்சிகள், சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், வாக்குமூலங்களை பரிசீலித்த பின், அறிக்கையை கமிஷன் தயாரிக்கும்.எனவே, இந்த கட்டத்தில், மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகள், நிராகரிக்கப்பட வேண்டியவை.மருத்துவமனையில், ஜெ., சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலை, இறக்கும் வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கவே, கமிஷன் அமைக்கப்பட்டது.சிகிச்சை குறித்த அனைத்து அம்சங்களையும், விசாரிக்க வேண்டிய கடமை, கமிஷனுக்கு உள்ளது. ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விசாரணையும், கமிஷனின் வரம்புக்குள் வருகிறது.விசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும், அதை உறுதி செய்தது.உண்மையை கண்டறியவே, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையின், ௫௬ டாக்டர்கள், 'எய்ம்ஸ்' மருத்துவமனை ஆலோசகர்களிடம், விசாரணை நடத்தப்பட்டது.கமிஷனின் சாட்சிகளாக தான், இவர்கள் விசாரிக்கப்பட்டனர். அவர்களிடம், மருத்துவமனையின் வழக்கறிஞர், குறுக்கு விசாரணை செய்தார்.குறுக்கு விசாரணைசசிகலாவின் வழக்கறிஞரும் குறுக்கு விசாரணை செய்தார். எனவே, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய, சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.ஜெ.,க்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் தன்மை பற்றி விசாரிக்கும்போது, டாக்டர்களிடம் பல கேள்விகளை கேட்க வேண்டியதிருந்தது. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதை, மறைமுகமாக எதிர்க்கும் விதத்தில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இதற்கு, அப்பல்லோ தரப்பில் பதில் அளிக்க ஏதுவாக, விசாரணையை, வரும், ௨௨ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.பதவி காலம் நீட்டிக்க கோரி கடிதம்ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, 2017 செப்., 25ல், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை முடிக்க, மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.அதற்குள், விசாரணையை முடிக்க முடியாததால், மேலும், ஆறு மாதங்களுக்கு, கமிஷனின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின், தலா நான்கு மாதங்கள் என, இரண்டு முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.இதுவரை, ஜெ., உறவினர்கள், உவியாளர்கள், சசிகலா உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என, 147 பேரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இன்னும், துணை முதல்வர் பன்னீர்செல்வம், லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலோ போன்றோரிடம், விசாரணை நடத்த வேண்டி உள்ளது. விசாரணை கமிஷனின் பதவிக்காலம், வரும், 24ல் நிறைவடைய உள்ளது. அதற்குள் விசாரணையை முடித்து, விசாரணை கமிஷன், அறிக்கை தாக்கல் செய்ய தயாரானது.இந்நிலையில், மருத்துவ குழு அமைக்கப்படாதது தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை, சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்ததால், வரும், 24க்குள் விசாரணையை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பதவி காலத்தை, நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி, தமிழக அரசுக்கு, விசாரணை கமிஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கிடையில், விசாரணைக்கு, வரும், 19ம் தேதி ஆஜராகும்படி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, 2017 செப்., 25ல், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை முடிக்க, மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.அதற்குள், விசாரணையை முடிக்க முடியாததால், மேலும், ஆறு மாதங்களுக்கு, கமிஷனின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின், தலா நான்கு மாதங்கள் என, இரண்டு முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.இதுவரை, ஜெ., உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலா உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என, 147 பேரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும், துணை முதல்வர், பன்னீர்செல்வம், லண்டன் டாக்டர், ரிச்சர்டு பீலோ போன்றோரிடம், விசாரணை நடத்த வேண்டி உள்ளது. விசாரணை கமிஷனின் பதவிக்காலம், வரும், 24ல் நிறைவடைய உள்ளது. அதற்குள் விசாரணையை முடித்து, விசாரணை கமிஷன், அறிக்கை தாக்கல் செய்ய தயாரானது.இந்நிலையில், மருத்துவ குழு அமைக்கப்படாதது தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்ததால், வரும், 24க்குள் விசாரணையை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பதவி காலத்தை, மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி, தமிழக அரசுக்கு, விசாரணை கமிஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கிடையில், விசாரணைக்கு, வரும், 19ம் தேதி ஆஜராகும்படி, துணை முதல்வர், பன்னீர்செல்வத்திற்கு, விசாரணை கமிஷன், சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X