மருந்து தட்டுப்பாடுக்கு அறிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருந்து தட்டுப்பாடுக்கு அறிக்கை

Added : பிப் 16, 2019
Advertisement

சென்னை:அரசு மருத்துவமனைகளில், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து, அறிக்கை அளிக்கும்படி, தமிழக மருத்துவ சேவைகள் கழகத்துக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரசு மருத்துவ மருத்துவமனைகளில், குறிப்பிட்ட மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், நோயாளிகள் அவதிஅடைந்து வருகின்றனர்.நோயாளிகள் பரிதவிப்பது குறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவான செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.இதையடுத்து, சென்னை உட்பட, அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், எந்தெந்த மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது; தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா? என, அறிக்கை அளிக்க, சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து, மாநில உளவுத்துறை போலீசாரும் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மேலும், மருந்துகள் தட்டுப்பாடு குறித்து, விளக்கம் அளிக்கும்படி, தமிழக மருத்துவ சேவைகள் கழகத்துக்கும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலையேற்றத்தால், குறிப்பிட்ட மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தங்கள் வாயிலாக, விரைவில் சீரமைக்கப்படும். தேவையான மருந்துகளும், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X