பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பதிலடி!
40 வீரர்களை கொன்ற பாக்., பயங்கரவாதிகளுக்கு...
'தகுந்த பாடம் கற்பிக்கப்படும்' என, மோடி சூளுரை

புதுடில்லி : ''ஜம்மு - காஷ்மீரில், 40 வீரர்களை கொன்ற, பாக்., பயங்கரவாதிகளுக்கு, தக்க பாடம் புகட்டப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார். இது தொடர்பாக, இன்று நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

பாக்., பயங்கரவாதி,பதிலடி,மோடி,சூளுரை


ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், நேற்று முன்தினம், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது, பாக்.,கைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் பயங்கரவாதி, வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனத்தை மோதச் செய்தான். இந்த கொலைவெறி தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., வாகனத்தில் இருந்த, 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்; பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்துக்கு, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும், கண்டனம் தெரிவித்துள்ளன.

விரிசல்:


இந்தியா - பாக்., இடையே, சமீப காலமாக பெரியளவில் மோதல் இல்லாத நிலையில், புல்வாமாவில் நடந்த தாக்குதல், இரு நாடுகளின் உறவில் கடும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இதன் வெளிப்பாடாக, பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதர், அஜய் பிஸாரியா, ஆலோசனை நடத்த இந்தியா வரும்படி அழைக்கப்பட்டுள்ளார்.

டில்லியில் உள்ள, பாக்., துாதர், சொஹைல் மஹமூதை, இந்தியாவின் வெளியுறவு செயலர், விஜய் கோகலே, தன் அலுவலகத்துக்கு அழைத்து பேசினார். அப்போது, புல்வாமா தாக்குதல் தொடர்பாக, பாக்.,கிற்கு கடும் கண்டனத்தை, கோகலே தெரிவித்தார். இதற்கிடையே, புல்வாமா தாக்குதலில் இறந்த, 40 வீரர்களின் உடல்கள், சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, மூவர்ணக் கொடிகள் போர்த்தப்பட்டு, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன.

கொதிக்கிறது:


புல்வாமா தாக்குதல் குறித்து, மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ''சர்வதேச அளவில், பாக்.,கை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, வெளியுறவு அமைச்சகம் முழு அளவில் மேற்கொள்ளும்,'' என்றார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று, 'வந்தே பாரத்' என்ற பெயரில் இயக்கப்படும், புதிய ரயிலை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூர தாக்குதலால், நாட்டு மக்களின் ரத்தம் கொதிக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளோரை தண்டிக்காமல் விட மாட்டோம். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.
பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில், பாதுகாப்பு படைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நம் அண்டை நாடு, பயங்கரவாத தாக்குதல்களால் நம்மை நிலைகுலையச் செய்துவிட முடியும் என, நினைக்கிறது. அதன் திட்டம் நிறைவேறாது.

பாக்.,கின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. அன்றாட செலவுகளுக்கு கூட, உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கும் சூழலில், பாக்., உள்ளது. அதனால், ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக, ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

அமெரிக்கா எச்சரிக்கை:

அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர், சாரா சாண்டர்ஸ் வெளியிட்டு உள்ள அறிக்கை: பயங்கரவாத அமைப்புகளுக்கு அளித்து வரும் ஆதரவையும், புகலிடம் வழங்குவதையும், பாக்., நிறுத்த வேண்டும். புல்வாமா தாக்குதல் மூலம், அமெரிக்கா - இந்தியா இடையிலான பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், மேலும் பலப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பழிக்கு பழி!

சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: புல்வாமா தாக்குதல் சம்பவத்தில், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வணக்கங்கள். இறந்த சகோதரர்களின் குடும்பத்தினருக்கு துணையாக நாம் இருப்போம். இந்த மோசமான சம்பவத்துக்கு, பழிக்கு பழி வாங்குவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்:

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அனைத்து கட்சி கூட்டத்தை, மத்திய அரசு இன்று கூட்டியுள்ளது. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டம் நடப்பது, இதுவே முதல் முறை. இந்த கூட்டத்தில், பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஒருமித்த முடிவு எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஊரடங்கு உத்தரவு அமல்:

பயங்கரவாத தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 40 பேர் உயிரிழந்ததை கண்டித்து, ஜம்மு நகரின் பல்வேறு பகுதிகளில், நேற்று போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் மக்கள் ஈடுபட்டனர். ஏராளமான வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. கடைகள் மீது கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, ஜம்முவில் நேற்று, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-பிப்-201922:25:14 IST Report Abuse

Pugazh Vவழக்கம் போல மடத்தனமாக செ.சிகாமணி எழுதியுள்ளார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களாம். அவர்கள் ராணுவ வீரர்கள் அல்லர். உள்துறை யின் நேரடி அதிகாரத்தில் இருக்கும் பாதுகாப்பு வீரர்கள். ஹய்யோ ஹய்யோ.. சிகாமணி பாவம்

Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
16-பிப்-201916:25:18 IST Report Abuse

R Sanjayஉயிரிழந்த வீரர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இதே போன்ற சம்பவங்கள் பலமுறை அரங்கேறிவிட்டது இந்த பாழாப்போன அரசியல்வியாதிகள் இதை பத்தோடு பதினொன்று என்று விட்டு விடுவார்கள். இதற்க்கு ஒரே தீர்வு. ஆட்சியில் உள்ளவர்களின் பிள்ளைகள் அவர்கள் ஆட்சி முடியும் வரை அவர்கள் பிள்ளைகளை ராணுவத்தில் பணி புரிய அனுப்பவேண்டும். ஊழல்வியாதிகளின் பிள்ளைகள் இதுபோன்ற தாக்குதல்களில் உயிரிழந்தால் உண்மையான வலி என்ன என்று இந்த அரசியல்வியாதிகளுக்கு தெரியும்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-பிப்-201919:55:33 IST Report Abuse

தமிழ்வேல் அரசு ஆஸ்பத்திரி, அரசு பள்ளிக்கே அனுப்ப மாட்டானுவோ.. இதுல...... ...

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
16-பிப்-201915:17:16 IST Report Abuse

Darmavanஆங்கில செய்திகளில் சொன்னது.காஷ்மீர் போலீஸ் தன்னிடம் வந்த உளவு துறை எச்சரிக்கையை CRPF க்கு அனுப்பவில்லை என்பதே காரணம்.அப்படியென்றால் காஷ்மீர் போலீசில் உள்ள கருப்பு ஆடுகள் காரணம்.அவைகளை வேரறுத்தால் நிலைமை சீராகும்.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X