அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க.,பா.ஜ.,தொகுதி பங்கீடு,பேச்சு,இழுபறி,பா.ம.க., தே.மு.தி.க.,குழப்பம்,நீடிப்பு

சென்னை: அ.தி.மு.க. - பா.ஜ. இடையே கூட்டணி உறுதியான போதும் தொகுதி பங்கீட்டில் இழுபறி காணப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டணியில் இணைய உள்ள பா.ம.க. - தே.மு.தி.க. கட்சிகளாலும் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் வட மாவட்ட தொகுதிகளையே அதிகம் கேட்பதால் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலை சந்திக்க தி.மு.க.வும் காங்கிரசும் கூட்டணி சேர்ந்துள்ளன. அந்த கூட்டணியில் இணைய ம.தி.மு.க., -விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் காத்திருக்கின்றன. இக்கட்சிகளுடன் தி.மு.க. தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சு நடத்தப்படவில்லை. ஆனால் ரகசிய பேச்சு மட்டும் நடந்து வருகிறது.
அதேபோல அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி உருவாவதும் உறுதியாகி உள்ளது. இவ்விரு கட்சிகள் இடையே பல கட்டமாக ரகசிய பேச்சு நடந்துள்ளது. இந்த கூட்டணியில் பா.ம.க. - தே.மு.தி.க. - புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை இணைக்கவும் பேச்சு நடக்கிறது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு தமிழக பா.ஜ. மேலிட பொறுப்பாளரான

மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுடன் அ.தி.மு.க. குழுவினர் மூன்று மணி நேரம் பேசினர். அப்போது பா.ஜ. தரப்பில் 10 தொகுதிகள் கேட்கப்பட்டு உள்ளது. பா.ம.க. - ஐந்து; தே.மு.தி.க. - நான்கு கேட்பது பற்றியும் பேசப்பட்டு உள்ளது.
பா.ஜ.வுக்கான 10 தொகுதிகளில் சிலவற்றை புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. தரப்பில் இதற்கு உடன்படவில்லை. தாங்கள் 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் மீதமுள்ள 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு தர விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதில் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பா.ம.க. - தே.மு.தி.க. தரப்பில் கேட்கப்பட்டுள்ள தொகுதிகள் விபரம் பியுஷ் கோயலிடம் தெரிவிக்கப்பட்டது. அதில் இரு கட்சிகளும் வட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட தொகுதிகளே வேண்டும் என கேட்பது தெரியவந்துள்ளது.
அதேபோல அ.தி.மு.க.வும், பா.ஜ.வும் கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகள் தங்களுக்கே வேண்டும் என விரும்புவதால் தொகுதிகளை அடையாளம் காண்பதில் இழுபறி நிலவுகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் ஐந்து தொகுதிகளுடன் புதுச்சேரியும் வேண்டும் என பா.ம.க. வலியுறுத்துவதாக தெரிகிறது.
கூட்டணியில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் சேர்கிறது. அக்கட்சிக்கு புதுச்சேரியை ஒதுக்க அ.தி.மு.க. வாக்குறுதி அளித்துள்ளது. இதுவும் சிக்கலுக்கு மற்றொரு காரணம். இதையடுத்து முதல் கட்டமாக அ.தி.மு.க. - பா.ஜ. இடையே கூட்டணியை உறுதி செய்த நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து விட்டு தொகுதி பங்கீடு பற்றி அடுத்த கட்டமாக பேச முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில் 'தொகுதி பங்கீட்டில் சிக்கல் இருப்பது உண்மை. பா.ம.க.வுடன் பேசி அக்கட்சியை சமாதானப்படுத்தும் பொறுப்பை அ.தி.மு.க. ஏற்றுள்ளது. தே.மு.தி.க.வுடன் பேசும் பொறுப்பை பா.ஜ. ஏற்றுள்ளது. எனவே விரைவில் சுமுக உடன்பாடு உருவாகும்' என்றனர்.
'காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக பிரதமர் உட்பட பா.ஜ. மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் டில்லியில் இருக்க வேண்டி உள்ளது. எனவே அடுத்தகட்ட பேச்சு ஓரிரு நாட்களுக்கு பின்னரே துவங்கும்' என பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
16-பிப்-201919:56:26 IST Report Abuse

J.Isaacநடராஜன் ராமநாதன் ஆரூர் ராங் blockeduser அதிமுக ஊழல் கட்சியா இல்லையா ?

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
16-பிப்-201918:50:57 IST Report Abuse

Solvathellam Unmaiஒட்டு எண்ணிக்கையின் போதும் இதே இழுபறி நிலை நோட்டாவுடன் ஏற்படும்

Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
16-பிப்-201916:37:30 IST Report Abuse

ramanathanதிருட்டு திமுக வில் சரியான செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை. அதுபோல் அதிமுக விலும் ஜெயலலிதாவை போல் தலைவர்கள் இல்லை. ஆகையால் பழைய சித்தாந்தம் பேசி பயன் இல்லை. விட்டுக்கொடுப்பார் கெட்டுப் போவதில்லை என்பதை அதிமுக உணர வேண்டும்.

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X