பயங்கரவாதி மசூத் விவகாரம்: ஆதரவு அளிக்க சீனா மறுப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
பயங்கரவாதி மசூத் விவகாரம்
ஆதரவு அளிக்க சீனா மறுப்பு

பீஜிங் : பாக்.கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க அண்டை நாடான சீனா மறுத்து விட்டது.

பயங்கரவாதி,மசூத்,விவகாரம்,ஆதரவு,சீனா,மறுப்பு


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 பேர் பலியாகினர். ஐ.நா. வெளியிட்டு உள்ள தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு இடம் பெற்றுள்ளது.

அதிர்ச்சி:


இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் பீஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றிய செய்திகளை சீனா கவனத்தில் வைத்து உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அனு தாபத்தையும் தெரிவிக்கிறோம். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவிக்கும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஜெய்ஷ் - இ - முகமது இடம்பெற்று உள்ளது. இது தொடர்பான தடை

Advertisement

நடவடிக்கைகளை பொறுப்புள்ள வகையில் சீனா தொடர்ந்து கையாளும்.

விதிகள்:


பயங்கரவாத தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது; இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சில விதிகளை பின்பற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு ஆதரவு அளிக்க முடியாது என்பதை சீனா மறைமுகமாக உணர்த்தி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

செல்வராஜ், திருநெல்வேலிAll true Indians should boycott Chinese products. இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரும் சீனாவின் பொருட்களை விலைகுறைவாக கொடுத்தாலும் வாங்கமாட்டேன்.

Rate this:
NaanPeriyavan - Pudukottai,இந்தியா
16-பிப்-201920:53:29 IST Report Abuse

NaanPeriyavanஅமெரிக்காவோ நாங்களோ ஒன்னும் உன் சீனாவை பார்த்து பயப்படல. அப்படி போர் வந்தா அவனுங்க கதி தெரியும்.

Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
16-பிப்-201920:50:59 IST Report Abuse

 nicolethomsonஅன்று அமெரிக்காவின் அடிவருடியாக பாகிஸ்தான் இருந்தது, பின்னர் அதன் முதுகில் குத்துவதற்கு பின் லேடன் பயன்படுத்தினார்கள், இப்போ சீனாவுக்கு போயிருக்கானுவ, பாப்பம் சீனா ஆப்படிக்குறானா, இல்லை பக்கி பாகிஸ்தான் ஆப்பு அடிக்குதா என்று

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X