முப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா?

Updated : பிப் 16, 2019 | Added : பிப் 16, 2019 | கருத்துகள் (57)
Advertisement

புதுடில்லி : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு, 44 வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத் ஆட்சியின் போது மாற்றப்பட்ட பாதுகாப்பு வாகன இயக்க விதிகளே காரணம் என கூறப்படுகிறது.




2002 ம் ஆண்டு முதல் 2005 வரை காஷ்மீரில் முப்தி முகம்மது சயீத் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அதற்கு முன்பு வரை, பாதுகாப்பு வீரர்களின் வாகனங்கள் செல்லும் போது அந்த வழியில், பொது மக்களின் வாகனங்கள் முற்றிலுமாக நிறுத்தப்படும். பாதுகாப்பு வீரர்கள் செல்லும் வாகனங்கள் அந்த இடத்தை கடந்த சென்ற பிறகே, பொதுமக்களின் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.




முப்தி முகம்மது ஆட்சிக்கு வந்த உடன், இந்த நடைமுறை பொது மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் எனவும், பாதுகாப்பு வாகன விதிமுறை என்ற பெயரில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த கொடுமையை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். முப்தி முகம்மதுவின் இந்த கோரிக்கையை ஏற்ற அப்போது காங்., தலைமையிலான மத்திய அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தியது. பாதுகாப்பு வீரர்களின் வாகனங்கள் செல்லும் பாதையில் வெடிகுண்டுகள் உள்ளதா என சோதிக்க வேண்டும், பாதுகாப்பு வாகன பாதையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இல்லாமல் பார்த்து கொள்வதே ராணுவத்தின் பங்கு இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில வழிகாட்டு முறைகள் வகுக்கப்பட்டு, ராணுவ வீரர்களின் வாகனங்கள் செல்லும் போது பொதுமக்களின் வாகனங்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.



ஒருவேளை பாதுகாப்பு வாகன பாதையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கபட்டால் மட்டுமே அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வீரர்கள் செல்லும் போது பொதுமக்களின் வாகனங்களும் செல்லலாம் என முப்தி முகம்மது கொள்கை விதிகளை மாற்றியதே தற்போது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வழிவகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு வீரர்கள் செல்லும் வாகன பாதையில், மற்ற வாகனங்களை இயக்குவதை முற்றிலுமாக தடுப்பதே இதற்கு ஒரே தீர்வு எனவும், பிஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் வான்வழியாக பயணிக்க தனியான வழி அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு காஷ்மீர் முன்னாள் டிஜிபி அசோக் பிரசாத் பரிந்துரை செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ananth - Seychelles,செசேல்ஸ்
17-பிப்-201909:22:07 IST Report Abuse
Ananth தினமலர் நிர்வாகத்துக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பல தவறான கருத்துக்களும், செய்திகளும், மத சம்பந்தமான கருத்துக்களும், தேச விரோத கருத்துகளும் வேறு வேறு பெயரில் பதிய படுகின்றன. அதனால் வாசகர் கருத்தை பதிவு செய்ய காசு கொடுத்து (Charges)(ஒவ்வொரு பதிவுக்கும் இவ்வளவு என்று) பதிவு செய்யும் முறைக்கு மாற வேண்டும். அல்லது இப்பகுதியே தேவையில்லை. அல்லது மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டு வாருங்கள். இல்லையேல் எதிர் வரும் காலங்களில் மிகுந்த பிரச்சனைகள் உருவாகும். நன்றி
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-பிப்-201904:25:38 IST Report Abuse
meenakshisundaram இவனுங்க மாத்திரம் இல்லே பாரூக் அப்துல்லன்னு பேரை சொல்லிக்கிட்டு தலைமுறையா ஒரு குடும்பமும் இங்கே உள்ளது அவ்னுங்களும் அனுபவிச்சுக்கிட்டே நாட்டை எதிர்ப்பவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
SINGAAN PALAN - kovai,இந்தியா
16-பிப்-201919:45:16 IST Report Abuse
SINGAAN PALAN 2003 -2005.. இப்பதான் நம்மாளு 5 வருஷம் முடிக்க போறாரே.. இந்தியா வரலாற்றிலேயே மிக பலவீனமான தற்போதய பாதுகாப்பு அமைச்சர்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X