Pak synonym for terrorism, security forces given free hand to punish Pulwama attack perpetrators: PM | பயங்கரவாதம் என்றால் பாகிஸ்தான்: பிரதமர் மோடி| Dinamalar

பயங்கரவாதம் என்றால் பாகிஸ்தான்: பிரதமர் மோடி

Updated : பிப் 16, 2019 | Added : பிப் 16, 2019 | கருத்துகள் (67)
Advertisement

யவத்மல்: காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு சுதந்திரம் வழங்கியுள்ளதாக கூறியுள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தான் என்றாலே பயங்கரவாதம் தான் எனக்கூறினார்.




மஹாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, பிரிவினைக்கு பின்னர் உருவான நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறது. தற்போது திவாலாகும் நிலையில், இருக்கும் அந்த நாடு, பயங்கரவாதத்திற்கு பெயர் பெற்றுள்ளது. புல்வாமாவில், வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது.





குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்திற்கு இன்னொரு பெயர பாகிஸ்தான்.
இந்த நேரத்தில், பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எங்கு, எப்போது நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி பாதுகாப்பு படையினர் முடிவு செய்வார்கள் .வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் வேதனை மற்றும் உங்களின் கோபத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.





வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Mozhi - salem,இந்தியா
17-பிப்-201902:39:43 IST Report Abuse
Tamil Mozhi மோடி ஜி நீங்க பேசி பேசி கழுத்தறுக்காதீர்.....தயவு செய்து உடனே சுர்ஜிக்கல் ஸ்ட்ரிக்கே செய்யவும்..மிகவும் மனா வருத்தத்துடன் சொல்லுகிறேன் ...
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
17-பிப்-201901:04:29 IST Report Abuse
Murugan டிரம்பு மாதரி பாகிஸ்தான் இந்திய இடையே பெரிய சுவர் எழுப்புங்கள்………………...
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
17-பிப்-201901:03:21 IST Report Abuse
Ramasami Venkatesan காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால் இந்த புல்லுருவிகளை இனம் கண்டு வேரோடு அழித்துவிடலாம். ஒரு சிலர் இவர்களுக்கு அடைக்கலம் தருவதால் தான் இப்படி நிகழ்கிறது. கை கோர்ப்போம், ஒழிப்போம் இந்த இயக்கத்தை வேரோடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X