அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மார்ச்சில், அ.தி.மு.க., - தி.மு.க., அணிகள்
அதிரடி பிரசாரம் ஆரம்பம்!

தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., தரப்பில், தனித்தனியாக நடந்து வரும் கூட்டணி பேச்சு, இந்த வார இறுதிக்குள் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில், இரு கட்சிகள் தலைமையிலான கூட்டணியின் அதிரடி பிரசாரம் ஆரம்பமாகிறது.

 மார்ச்சில், அ.தி.மு.க.,, - தி.மு.க., அணிகள், அதிரடி,பிரசாரம்  ஆரம்பம்!

மார்ச், 1ல், கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர், இ.பி.எஸ்., - பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த அணிக்கு போட்டி யாக, மார்ச், 3ல், விருதுநகரில், தி.மு.க., சார்பில் நடக்கும் பேரணி மற்றும் தென் மண்டல தேர்தல் மாநாட்டில், காங்கிரஸ் பொதுச்செயலர், பிரியங்கா உள்ளிட்ட, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.மார்ச், 4ல், லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டால், மத்தியில் உள்ள, பா.ஜ.,வின் ஆட்சி அதிகாரத்திற்கு மவுசு குறைந்து விடும் என்ப தால், மாநில கட்சிகளுடனான கூட்டணியை உறுதி செய்வதில், பா.ஜ., மேலிடம் அவசரம் காட்டி வருகிறது.சமீபத்தில், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பியுஷ் கோயல், நிதின் கட்கரி ஆகிய மூவரும்,

தமிழகத்தில் முகாமிட்டு, கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர்.

சென்னையில், பியுஷ் கோயலை, அ.தி.மு.க., அமைச்சர்கள், தங்க மணி, வேலுமணி தனியாக சந்தித்து பேசினர்.அப்போது, அ.தி.மு.க., தலைமையில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகள் சேர்ந்து, மெகாகூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்தும் பேசப்பட்டுள்ளது.


பா.ஜ.,வுக்கு ஏழு தொகுதிகளும்,பா.ம.க., தே.மு.தி.க., வுக்கு, தலா, நான்கு தொகுதிகளும் ஒதுக்குவது பற்றி பேசப்பட்டுள்ளது.அதாவது, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, மொத்தம், 40 தொகுதிகளில், அ.தி.மு.க., - 25 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், 15 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பது என்றும் முடிவாகியுள்ளது.

இதில், கொங்குமண்டலத்தில், பா,ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் மட்டும், இழுபறி நீடிக்கிறது. எனினும், தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள், அ.தி.மு.க., அணி பேச்சில் உடன்பாடு எட்டப்படும் என, தமிழக, பா.ஜ., கருதுகிறது.


மார்ச், 1ம் தேதி, கன்னியாகுமரியில், பா.ஜ., தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில்,பிரதமர் மோடி பங்கேற்கிறார்.அந்த மேடையில், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர், பன்னீர்செல்வம், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி தலை வர்களை கைகோர்க்க வைக்க, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர முயற்சி எடுத்து உள்ளார்.

Advertisement

இதற்கிடையில், காங்கிரஸ், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கள், மனிதநேய மக்கள் கட்சி களுடனான உடன்பாட்டை இறுதி செய்ய, தி.மு.க.,வும் தயாராகி வருகிறது.

கூட்டணி முடிவானதும், மார்ச், 3ல், விருதுநகரில் பேரணி மற்றும் தென் மண்டல தேர்தல் மாநாட்டை நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது.அந்த கூட்டத்துக்கு, காங்கிரஸ் பொதுச்செயலர், பிரியங்காவை அழைக்க, ஸ்டாலின் விரும்புகிறார். அதற்காக, வரும், 26ம் தேதி, டில்லி செல்கிறார் ஸ்டாலின். அங்கு, 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தில் பேசுகிறார்.

அதில், குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, தி.மு.க., வின் கருத்தை வலியுறுத்த உள்ளார். அக் கூட்டம் முடிந்த பின், ராகுல், பிரியங்காவை சந்தித்து, தமிழகம் வரும்படி அழைப்பு விடுக் கிறார். பிரியங்கா வருகையை உறுதி செய்து, சென்னை திரும்ப, ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார்.எனவே, மார்ச் முதல் வாரம், தமிழக அரசியலில் அதிரடிகள் அதிகம் இருக்கும் என தெரிகிறது. - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
17-பிப்-201919:49:46 IST Report Abuse

 N.Purushothamanதமிழ்வேல் ஜி ...மத சார்ந்த கருத்தை சொன்னவர் தான் உங்க சுடலை ...ராணுவ வீரர் சாவது இயல்புன்னு சொன்ன ஒரு கட்சி தலைவன்னா அது இந்த ஆள் தான் ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-பிப்-201914:50:52 IST Report Abuse

Pugazh Vஇந்துக்களே உங்கள் உறவுகளுக்கெல்லாம் சொல்லுங்கள் : திருட்டு திராவிடால்ஸ், டுமிளன்ஸ், டாஸ்மாக் டம்ளர்கள், என்றெல்லாம் உங்களையும் உங்கள் முன்னோர்கள் மற்றும் உறவுகளை அவமரியாதையாக, அநாகரிகமாக, கேவலமாக எழுதும் நடத்தும் பாஜகவினரை ஒதுக்குங்கள்.

Rate this:
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
17-பிப்-201912:38:40 IST Report Abuse

தோலுரிப்பவன் பாஜக அதிமுக கூட்டணி அமைந்து மீண்டும் ஒரு இதேஆட்சி அமைந்தால் இப்பொழுது மக்கள் 50 ஆண்டுகாலம் பின்சென்ற கற்காலம் மீண்டும் தொடரும் பணமதிப்பிழப்பு, பெட்ரோலிய எரிபொருளுயா்வு,வரலாறு காணாத ரூபாயின் சரிவு.. படுகொலை தமிழக அரசு என மக்களே மீண்டும் மரண குழிக்கு செல்ல தயாராவார்கள்

Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17-பிப்-201915:23:35 IST Report Abuse

 Muruga Velஉங்களால எதுவுமே முடியாது ..அதனால விடியாது .. ...

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X