அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி, கமல் விவகாரம் குஷ்பு மீது ராகுலிடம் புகார்

Added : பிப் 16, 2019 | கருத்துகள் (16)
Advertisement
கருணாநிதி, கமல் விவகாரம் குஷ்பு மீது ராகுலிடம் புகார்

'முன்னாள் முதல்வர், கருணாநிதி தமிழரா' என, விமர்சனம் செய்தது, தி.மு.க.,வை விமர்சித்த, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமலை கண்டிக்காதது என, நடிகை குஷ்பு மீது, தமிழக காங்கிரஸ் கட்சியில், புகார் பட்டியல் தயாராகி உள்ளது.குஷ்பு, ஒரு வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'கருணாநிதி, தமிழர் கிடையாது; எம்.ஜி.ஆர்., தமிழகத்தைச் சேர்ந்தவரல்ல; ஜெயலலிதா, கர்நாடகத்தில் இருந்து வந்தவர். எனவே, ரஜினியை பற்றி பேசுவது தவறானது' என, கூறியிருந்தார்.குஷ்புவின் இந்த கருத்தை கண்டித்து, சமூக வலைதளங்களில், தி.மு.க.,வினர் விமர்சித்திருந்தனர். உடனே, உஷாரான குஷ்பு, 'தி.மு.க., என் வீடு, கோவில், பள்ளிக்கூடம்; கருணாநிதி என் தெய்வம்' என, 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு செய்து, எதிர்ப்பை சமாளிக்க முயன்றார்.இது போன்ற செயல்களால், தி.மு.க., கூட்டணி கட்சிகளிடம், எதிர்மறையான விளைவுகளை, குஷ்பு ஏற்படுத்தி வருகிறார் என, அவரது எதிர் கோஷ்டியினர், புகார் பட்டியல் தயாரித்துள்ளனர். அதை, காங்., தலைவர், ராகுலுக்கும் அனுப்பிஉள்ளதாக தெரிகிறது.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
22-பிப்-201917:04:16 IST Report Abuse
kalyanasundaram . if at all any action then even few seats for kangrass will be lost
Rate this:
Share this comment
Cancel
Babu Desikan - Bangalore,இந்தியா
21-பிப்-201920:14:45 IST Report Abuse
Babu Desikan இன்றைய தலைமுறையில் பல பேருக்குத் தெரிந்திராத உண்மையை குஷ்பூ எடுத்து சொல்லி இருக்கிறார். அதே சமயம் தானும் தமிழர் அல்ல, சார்ந்திருந்த மதம் வேறு என்பதை மறக்கக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
20-பிப்-201913:47:38 IST Report Abuse
Murugan காங்கிரசின் கோட்டையான உத்திரபிரதேசத்திலே கட்சி ஆட்டம் கண்டுவிட்டது……இங்கு என்ன வேலை இவர்களுக்கு…...இத்தாலியில் இருந்து இறக்குமதி ஆகிய இவர்களுக்கே இவ்வளவு தில் இருக்கும்போது …….தமிழனாகிய கமலுக்கு ஏன் கூடாது???????????????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X