பதிவு செய்த நாள் :
உறுதி!
பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி...
'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம்

மும்பை:''ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கர வாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் உறுதியாக உள்ளோம். இந்த சம்பவத்துக்கு, நாட்டு மக்கள் விடும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் வீணாகாது; அதற்கு பதில் கிடைத்தே தீரும்,'' என, பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

உறுதி, பயங்கரவாதி,பதிலடி,மோடி, கண்ணீர்,

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், புல்வாமாவில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது, வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்கச் செய்து, சமீபத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு - காஷ்மீரில், ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தற்கொலைப் படை தாக்குதல் இது. இந்த தாக்குதலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், 'இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்' என, மோடி கூறியிருந்தார். பல நாடுகளும், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள மஹாராஷ்டிராவில், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, இந்த தாக்குதல் தொடர்பாக, உருக்கமாகவும், ஆவேசமாகவும் அவர் பேசினார். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு, இந்த நிகழ்ச்சிகளில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மோடி பேசியதாவது:

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்கு தலில்,40 வீரர்கள்

பலியான சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த தாக்குதலுக்கு பதிலடி தர வேண்டும் என்ற கொந்தளிப்பையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின், நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான், பயங்கரவாதி களின் புகலிடமாக, பயங்கரவாதத் தின் மறு உருவமாக மாறி உள்ளது. புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பதில் சொல்லியே தீர வேண்டும்.

இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்து முடிவு செய்யும் சுதந்திரம், நம் படை களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்தில், எங்கு, எப்படி பதிலடி தருவது என்பதை, நம் படைகளே முடிவு செய்யும்.அதுவரை, நாட்டு மக்கள், பொறுமையுடனும், ராணுவத்தின் மீது நம்பிக்கை யுடனும் இருக்க வேண்டும்.நம் வீரர்களை குறி வைத்து தாக்குதல் நடத்த குண்டுகளையும், துப்பாக்கிகளையும் அளிப்போரை, புதிய இந்தியா ஏற்காது.

வீரர்கள் உயிரிழந்த சம்பவம், நாட்டு மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. ஒவ்வொரு கண்ணீர் துளியும் வீணாகாது; அதற்கு பதில் கிடைப்பதை உறுதி செய்வோம்.நாடு கண்ணீரில் இருக்கும்போது, நம் அடுத்தகட்ட நடவடிக்கைகள், உணர்வுபூர்வமானதாகவும், கட்டுப்பாடு உள்ளதாகவும் இருக்க வேண்டும். புதிய இந்தியாவில், நம் நடவடிக்கைகளும், கொள்கைகளும் வித்தியாசமானதாக இருக்கும்.

உலக நாடுகளுக்கு இது, புதிய அனுபவமாக அமையும். நம் வீரர்களை கொல்வதற்கு, துப்பாக்கிகள், குண்டுகளை அளித்தவர்கள், இனி அமைதியாக உறங்க முடியாது.இவ்வாறு, அவர் பேசினார்.

ராணுவத்துக்கு உள்ள வாய்ப்புகள்!'பயங்கரவாதத்தை ஊகுக்குவிக்கும், பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தசூழ்நிலையில், நம் ராணுவத்தின் முன்

Advertisement

உள்ள வாய்ப்புகள் குறித்து, பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறியதாவது:

யூரியில் நடந்த தாக்குதலுக்குப் பின், நம் ராணுவத்தினர், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப் படும் துல்லிய தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, பயங்கரவாதி களின் முகாம்கள் அதில் அழிக்கப்பட்டன. ஆனாலும், அது பாகிஸ்தானின் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த சூழ்நிலையில், மிக நிதானமாகவும், அதே நேரத்தில், நிரந்தர தீர்வு ஏற்படும் வகையிலும் நம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும். பாகிஸ்தான் இதுவரை, தன் ராணுவத்தின் மூலம் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. பயங்கரவாதிகளையே ஆயுதங்களாக பயன் படுத்தி உள்ளது.அதனால், நம் ராணுவ நடவடிக்கைகள், பயங்கரவாதி களை குறி வைக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கலாம்.

பாகிஸ்தானுடனான எல்லையில்,நம் ராணுவம், எல்லையைத் தாண்டாமல், அந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ் தான் ராணுவ முகாம்களை குறி வைத்து, பீரங்கி தாக்குதலை நடத்தலாம். அதேபோல், எல்லையில், தற்போதுள்ள உயரமான இடங்களைவிட, மேலும் உயரமான இடங்களில், நம் முகாம்களை அமைத்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கலாம்.

பாகிஸ்தான் எல்லைக்கு செல்லாமலேயே, நம் எல்லைப் பகுதியில் இருந்து, விமானம் மூலம் அவ்வப்போது தாக்குதல் நடத்தலாம். அதே சமயம், பாகிஸ்தான் ராணுவமும் தயார் நிலையில் உள்ளது. அதனால், எதிர் தாக்குதல் நடத்தினால், அதை சமாளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

இத்தனை ஆண்டுகளாக நம் நடவடிக்கைகள், பாகிஸ்தானுக்கு படிப்பினையாக அமைய வில்லை. அதனால், தொடர்ந்து, பயங்கர வாதி கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. நம் அடுத்தகட்ட நடவடிக்கைகள், பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும், பயங்கரவாதி களுக்கும் மிகப் பெரிய படிப்பினையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Houston,யூ.எஸ்.ஏ
18-பிப்-201900:00:01 IST Report Abuse

Rayஇன்னும் ஏன் பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவில்லை. பொறுத்தது போதும் வீறு கொண்டு பொங்கி எழு என் தாய் திரு நாடே. இதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

Rate this:
ராம.ராசு - கரூர்,இந்தியா
17-பிப்-201920:48:18 IST Report Abuse

ராம.ராசு இராணுவ வீரர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளதை நினைக்கும்போது நெஞ்சம் பதை பதைக்கிறது. ஆனால் நமது நாட்டு உளவுத் துறையும் ராணுவ கண்காணிப்பும் இருக்கிறது. அதிகக் கட்டுப்பாடுகள் உள்ள ராணுவ அணி வரிசையில், அதுவும் பாதுகாப்பு மிக்க பகுதியில் வந்து 350 கிலோ வெடியுடன் வந்து தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், மிகப்பெரிய ராணுவ பலத்தை வைத்துள்ளோம் என்று பெருமை பேச முடியவில்லை. சாமானியன் தலைக்கவசம் அணியவில்லை என்று துரத்திச் சென்று மிதித்து கொல்லும் காவல்துறை இருக்கும் நமது நாட்டில் ஒற்றைத் தீவிரவாதியை, அதுவும் 350 கிலோ வெடி மருந்துடன் தாக்குதல் நடத்திய தீவிரவாதியை கண்டுபிடிக்காமல் போனது ஆச்சரியம். போதுமான அளவிற்கு வீரர்களை இழந்துவிட்டோம். பதிலடி கொடுப்பதால் ஒரு வீரரை கூட இழக்காத வகையில் இருக்கவேண்டும். , ஒரு வாசகர் பதிவிட்டதுபோல :"நாம் ஒரு வல்லரசு ,டிஜிட்டல் இந்தியா ,கணனிமயம் ,தொழில்நுட்பத்தில் உட்சபட்சம் ,பாதுகாப்பிலோ உயரிய கண்காணிப்பு என்றிருக்கையில் ஒரு தீவிரவாதி ஊடுருவியது எப்படி? ஒரு உச்ச பட்ச பாதுகாப்பில் சென்ற வீரர்களை இழந்தது ஏன் ? போரில் வீரமரணம் எய்திருந்தால் அது நாட்டிற்காக செய்த தியாகம் .. ஆனால் நிராயுதபாணிகளாக சென்ற எங்களுடைய கண்மணிகளாகிய பலிகொடுக்கப்பட்டது ஏன் .. எப்படி நடக்க முடியும் .. வழிநெடுக காவலர்கள் ஒருவாரத்திற்கு முன்பே வழியை கட்டுக்குள் வைத்தது. வழிநெடுக முன்கூட்டியே பரிசோதனைகள் ,கண்காணிப்பு கருவிகள் ,எல்லாமிருந்தும் இது நடந்திருப்பது எப்படி....? " ஆளும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஆதரவும் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. சாமானியனின் இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா......

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-பிப்-201912:15:16 IST Report Abuse

Malick Rajaஇதற்க்கு மட்டும் பதில் வரவே வராது நம்மில் இருக்கும் கருப்பு ஆட்டை கண்டுபிடிக்காமல் இருப்பது ஏன் .. ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த கேள்வி ஏற்படும் .. ஆனால் அதை மழுங்கடிப்பதில் ஆட்சியாளர்கள் இருப்பதில் கடுத்த சந்தேகம் ஏற்ப்படுகிறது .. ஏன் என்ற கேள்விக்கு பதில் வரவே வராது காரணம் ஆட்சியாளர்களே ... ...

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
17-பிப்-201917:55:12 IST Report Abuse

Sathish அடுத்தவன் எக்கேடுகெட்டு போனா நமக்கென்ன, நம்ம மட்டும் நல்லா வாழ்ந்தா போதும், நம்ம குழந்தை நம்ம குடும்பம் மட்டும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-பிப்-201912:16:56 IST Report Abuse

Malick Rajaஅத்தகைய எண்ணம் கொண்ட கயவர்களை கண்டறியும் காலம் வந்தே தீரும் .. வந்தே தீரும் .. ...

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X