டெண்டரில் முறைகேடு ஸ்டாலின் குற்றச்சாட்டு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
டெண்டரில் முறைகேடு ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, 'காவல் துறை டெண்டரில் ஊழல் செய்தவர்கள், துணை போனவர்கள் அனைவரும், குற்றவாளி கூண்டில் நிறுத்தப் படுவர்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 டெண்டரில்,முறைகேடு,ஸ்டாலின்,குற்றச்சாட்டு

அவரது அறிக்கை:

சென்னையிலும், திருச்சியிலும், காவல் துறைக்கு, 'டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்' உருவாக்கும், 88 கோடி ரூபாய், 'டெண்டர்' பணியில், மிகப்பெரிய முறைகேடுகள் நடந்து

உள்ளன. கடந்த, 2012ல் துவக்கப்பட்ட இத் திட்டம், 38 கோடி ரூபாயில் முடிந்திருக்க வேண்டியது. ஆனால், இன்று, 88 கோடி ரூபாய் உயர்ந்து, பகல் கொள்ளை நடந்துள்ளது.

இத்திட்டத்திற்கான டெண்டரில், ஒரேஒருவரிடம் ஒப்பந்தம் பெற்று, அவருக்கே பணி வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் உரிமம் இல்லை. சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பாதைகளில், இந்த ரேடியோ டிஜிட்டல் சிஸ்டம் இயங்காது.ஆனால், சுரங்க பாதைகளிலும், இந்த சிஸ்டம் செயல்பட வேண்டும் என்பதே, ஒப்பந்தப் புள்ளியின் முக்கிய நோக்கம்.


டெண்டர் போட்டவர், என்ன விலை கேட்டாரோ, அந்த விலையை எவ்வித தயக்கமுமின்றி, டி.ஜி.பி.,டி.கே.ராஜேந்திரன் அளித்துள்ளார். ஒரு டெண்டரை, எப்படி முடிவு செய்யக் கூடாதோ, அந்த அளவிற்கு மோசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. டெண்டரில் உள்ள, அனைத்து பொருட்களுக்கும், கற்பனைக்கு-எட்டாத அளவுக்கு, பல மடங்கு அதிக

Advertisement

விலை கொடுக்கப் பட்டு உள்ளது. வரலாறு கண்டிராத அளவுக்கு,டெண்டர் முறை கேடு செய்து, அரசுக்கு, ரூ.88 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இது தொடர்பாக,கடும் நடவடிக்கை எடுக்க படும்.


ஊழல் செய்தவர்கள், ஊழலுக்கு துணை போன வர்கள் அனைவரும்,குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவர்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-பிப்-201903:52:32 IST Report Abuse

meenakshisundaramஇவர் இந்த விஷயங்களில் எல்லாம் PhD பட்டம் வாங்கியவர் .டெண்டர் .எப்படி கொடுக்கோணும் .எப்படி மாட்டிக்கிடாமே இருக்கோணும் என்பதில் அத்துப்படி.சர்க்காரியாவினால் பட்டம் வாங்கிய தலைவரின் வாரிசு.

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-பிப்-201903:58:51 IST Report Abuse

J.V. Iyerசுடாலின் உத்தமர் தீமுக்க ஆட்சியில் நடந்த டெண்டர் முறைக்கேட்டாயா சொல்கிறார்? உடனே நடவடிக்கை எடுங்கள். சுடாலின் அய்யா, அடித்த பணத்தை திரும்ப கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Rate this:
17-பிப்-201920:37:11 IST Report Abuse

ஆப்புதோ பார்ரா...மஸ்டர் ரோல் டெண்டரைப் பாத்து ஊழல்னு சொல்லுறார்.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X