பொது செய்தி

இந்தியா

பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 17, 2019 | கருத்துகள் (51)
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.







இது தொடர்பாக காஷ்மீர் மாநில நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரிவினைவாத தலைவர்களான மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் கனி பட், பிலால் லோன், ஹாசிம் குரேஷி மற்றும் ஷாபிர் ஷா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு, வாகனங்கள், ஆகியவை மாலை முதல் திரும்ப பெற்று கொள்ளப்படும். அவர்களுக்கோ, வேறு எந்த பிரிவினைவாத தலைவர்களுக்கோ எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பு வழங்கப்படாது. அரசின், வேறு எந்த சலுகையை அவர்கள் பெற்று வந்தாலும் அதுவும் உடனடியாக ரத்து செய்யப்படும். போலீஸ் பாதுகாப்பு உள்ள மற்ற பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வாபஸ் பெறுவது குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அதில் எனக்கூறப்பட்டு உள்ளது. இந்த உத்தரவில், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுள்ள பிரிவினைவாத தலைவரான சயீத் அலி ஷா கிலானிக்கு பாதுகாப்பு வாபஸ் குறித்த தகவல் ஏதும் இல்லை.






காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து அங்கு சென்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமிருந்து நிதி பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் எனக்கூறியிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-பிப்-201910:07:42 IST Report Abuse
karthik நாயகளை எண்கௌண்டர் போடனும்
Rate this:
Share this comment
Cancel
18-பிப்-201908:15:10 IST Report Abuse
Boopathi Subramanian பிரிவினைவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கியது யார்.அவனையும் நாடு கடத்த வேண்டும்
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
18-பிப்-201909:34:55 IST Report Abuse
Darmavanஇவங்களுக்கு பாதுகாப்பு வழங்கியது காங்கிரஸ் என்ன செய்யலாம்?...
Rate this:
Share this comment
Cancel
kurinjikilan - Madurai,இந்தியா
17-பிப்-201921:26:33 IST Report Abuse
kurinjikilan பிரிவினை வாதிகளுக்கு பாதுகாப்பு தருவது நச்சுப் பாம்புக்கு பால் ஊற்றுவதைப்போல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X