காஷ்மீர் தாக்குதல்: மக்களின் கோபம் என்னிடமும் உள்ளது: பிரதமர் மோடி

Updated : பிப் 17, 2019 | Added : பிப் 17, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement

பரவுனி: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, மக்கள் மனதில் எரியும் நெருப்பானது எனது மனதிலும் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.latest tamil newsபீஹார் சென்றுள்ள பிரதமர் மோடி பரவுனியில் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.

பின்னர் பிரதமர் பேசுகையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்தன் குமார் தாகூர் ஆகியோருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். இங்கு ஏராளமான மக்கள் கூடியுள்ளீர்கள். புல்வாமாவில் நடந்த தாக்குதலால், உங்கள் மனதில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது, எனது இதயத்திலும் உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.


latest tamil newsஇந்த கூட்டத்தில் பங்கேற்ற பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் ஆகியார், புல்வாமா தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabhu -  ( Posted via: Dinamalar Android App )
18-பிப்-201900:41:32 IST Report Abuse
prabhu கேள்வி 1) 350 கிலோ வெடிபொருள் உயர் பாதுகாப்பு தேசிய நெடுஞ்சாலைக்கு எப்படி வந்தது?பதில் 1) கோவை குண்டுவெடிப்பு, பார்லிமெண்ட் தாக்குதலுக்கு எப்படி வெடிமருந்து கொண்டுவந்தனர், உள்ளூர் தீவிரவாத ஆதரவாளர்கள் துணையோடு (அதும் காஷ்மீரில் சொல்லவே வேண்டாம்)கேள்வி 2) 2500 படைவீரர்களை ஒரே நேரத்தில் நேற்று அதிகாலை நகர்த்த உத்தரவிட்டது யார்?பதில் 2) 2,500 படைவீரர்கள் நகர்வு என்பது உள்மாநிலங்களில் வேண்டுமானால் பெரிய விசயமாக இருக்கலாம், காஷ்மீரில் சாதாரண நிகழ்வு, இதுபோன்ற தாக்குதல்களில் தப்பவே ஒவ்வொரு வாகனத்திற்குமிடையே சீரான இடைவெளி விட்டுச் செல்வார்கள்! இதனால்தான் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகவில்லை!கேள்வி 3) பக்சி ஸ்டேடியம் Transit Camp க்கு 30 கிமீ அருகில் 2 நாட்கள் பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் இல்லையா?பதில் 3) பாதுகாப்பு நடவடிக்கை இறுகியதால்தான் இந்த டார்கெட்டை மாற்றி திடீர் தாக்குதல், ஆம் அங்கு சென்று கொண்டிருந்த வீரர்கள் உளவுத்துறை அறிவிப்பை முன்னிட்டே பாதுகாப்பை பலப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்! ஆனால் உள்ளூர்வாசிகளின் முழு ஒத்துழைப்பு இருக்கும்போது இதை நிகழ்த்துவது பெரிய விஷயமல்ல! மேலும் அவர்களின் டார்கெட் ராணுவ முகாம், பொதுமக்கள் கூடுமிடம் என்பதாக இருந்திருக்கலாம் ஆனால் பாதுகாப்பு கெடுபிடியால் தங்கள் குறியை மாற்றி CRPF வீரர்களை தாக்கியிருக்கலாம்கேள்வி 4) போக்குவரத்து தடை செய்யப்பட்டு தீவிர சோதனைகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றும் எப்படி தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டது?பதில் 4) போக்குவரத்து தடை செய்யப்பட்டது என்று யார் சொன்னது??? ராணுவ வாகனங்கள் சென்ற சாலையில் மட்டுமே போக்குவரத்து தடை செய்யப்பட்டது, மறுபுற சாலை பொதுமக்கள் உபயோகத்திற்காக வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டிருந்தது! இதன்மூலம் உள்ளூர்வாசிகள் துணையோடு நடைபெற்றது உறுதி!கேள்வி 5) பல இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று CRPF செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் ஜா கூறுவதன் பொருள் என்ன?பதில் 5) பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது மற்றும் தீவிரவாத வேட்டையின்போதும் வீரர்கள் மீது கல்வீசி தாக்கி கவனம் சிதறடிப்பதையும், உள்ளூர்வாசிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் இடையூறு ஏற்படுத்துவதையும் குறிப்பிட்டிருக்கலாம், தாக்குதல் நடந்தவுடன் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்த மெஹபூபா முப்தியின் பேட்டியை பார்க்கவும் (பெங்களூரில் படிக்கும் காஷ்மீர் மாணவன் ஒருவன் தாக்குதலுக்கு சிறிது நேரம் முன்பாகவே சமூக வலைதளத்தில் கருத்து கூறி தலைமறைவு, தற்போது தேடப்பட்டு வருகிறான்)கேள்வி 6) எந்தப் புலனாய்வுகளும் நடத்தாமல் 6 மணி நேரத்துக்குள் வீடியோ வெளியிடப்பட்டு லக்சர் இ மொகம்மத் அமைப்புதான் செய்தது என்று தீவிரவாதியின் பெயரோடு தொலைக்காட்சிகளுக்கு யார் தகவல் கொடுத்தது?பதில் 6) எந்தத் தொலைக்காட்சியும் வீடியோவை வெளியிடவில்லை பாகிஸ்தானின் ஜெய்ஸ்_இ_முஹம்மது இயக்கம் நடத்தும் சமூக வலைதள பக்கத்திலேயே முதலில் வீடியோ வெளியிடப்பட்டது, அதன்பிறகே மீடியாக்கள் அதை ஒளிபரப்பின!கேள்வி 7) பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா உளவுத்துறை அறிக்கைகளைப் படிக்காமல் ஊறுகாய் அல்லது வடகம் பிழிந்து கொண்டிருந்தாரா?பதில் 7) இது சந்தேகம் அல்ல வெறுப்பு அரசியல், அவரின் ஆளுமைக்கு நிறைய உதாரணங்கள் உண்டு, திருடும்போது ஓனரும் போலீஸ்காரர்களும் விளக்கு பிடித்தனரா என்று கேட்பதை ஒத்தது! (2,500 வீரர்கள் குவிப்பு உளவு அறிக்கையின்படியே நிகழ்ந்தது, இந்த ஒரு கருத்து உங்களின் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது, இதுலயும் அரசியலா???கேள்வி 8 ) மோடியால் ஒரு நாள் கூட பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒத்தி வைக்க முடியாதா? இதுதான் படைவீரர்களுக்கு நீ செய்கிற அஞ்சலி கூந்தலா???பதில் 8) அவருக்கு ஆர்டர் போட நீ யாரு??? பிரதமரின் அலுவல்களை நிகழ்ச்சிநிரலை திட்டமிட நீ யார்??? பிரச்சினை தொடர்பான தீர்வை பழிதீர்க்க ராணுவம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அறிவித்துவிட்டு அவர் தனது வழக்கமான பணியை மேற்கொண்டது அவரது ஆளுமை மற்றும் வலிமையை காட்டுகிறது! இதுபோன்ற உறுதியான தலைவர்களாலேயே நம்மை நிலைகுலையச் செய்யவேண்டுமென்று நினைத்த எதிரிகளின் எண்ணம் நிறைவேற விடாமல் செய்ய முடியும், படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதிலும் வெறுப்பு அரசியல் த்தூப்!கேள்வி 9) பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் குண்டு துளைக்காத வாகனங்கள் இந்த முறை எங்கே போயின?பதில் 9) எந்தெந்த பாதுகாப்பு வாகனங்கள் குண்டு துளைக்காதவை எனக் கூற முடியுமா??? #ராணுவத்தின்மீது அல்லது BSF மீது தாக்குதல் நிகழ்த்தினால் நிச்சயம் பெருஞ்சேதம் விளைவிக்க முடியாதென்று கணக்கிட்டே முகாம் சென்ற CRPF வீரர்களை இலக்காக்கியுள்ளனர், இதன்மூலம் CRPF ன் பாதுகாப்புச் செலவினங்களையும் அதிகரிக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!கேள்வி 10) பாரதீய ஜனதாவின் ஆட்சியில் தேர்தலின் போதெல்லாம் குண்டு வெடிப்புகளும், தற்கொலைப்படைத் தாக்குதல்களும் நிகழ்ந்து இந்தியர்கள் தேசபக்தியில் புல்லரித்து "வந்தே, பொந்தே" என்று ஊளையிடுவது தற்செயலா காவிகளின் திட்டமிட்ட சதியா?பதில் 10) நான் எதிர்பார்த்த கடைசி கருத்து கரெக்ட்டா உங்க "மோடி ஒயிக" விஷயத்துல வந்து நின்னுட்டீங்க! மொதல்ல மெஹபூபா முப்தி கருத்தைப் பற்றி என்ன நினைக்குறீங்க??? காங்கிரஸ் அமைச்சர் சித்து கருத்து பற்றி என்ன நினைக்குறீங்க??? தீவிரவாத தலைவன் மசூத் அசார் கருத்த பற்றி என்ன நினைக்குறீங்க?? காஷ்மீரைப் பற்றி என்ன நினைக்குறீங்க?? காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பற்றி என்ன நினைக்குறீங்க???காங்கிரஸின் முக்கியத் தலைவர் மணிசங்கர் ஐயர் பாகிஸ்தான் சென்று அந்த ராணுவத் தளபதியிடம் இந்தியாவில் காங்கிரஸ் வெற்றிபெற உதவவேண்டும் என்று கேட்டதைப் பற்றி என்ன நினைக்குறீங்க??? ஆட்சியில் எந்த பதவியில் இல்லாதபோதும் ராகுல் காந்தி அடிக்கடி ரகசியமாக சீனத் தூதர்களை சந்திப்பதை பற்றி என்ன நினைக்குறீங்க???மோடியின் இந்த ஆட்சியில்தான் ராணுவ வீரர்களை மீறி நாட்டிற்குள் எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் நடைபெறவில்லை என்பது உண்மை, ஏன் மக்களுக்கு மோடியின் மீதான இந்த நற்பெயரை, செல்வாக்கை தகர்க்க பாகிஸ்தான் காங்கிரஸ் மெஹபூபா தீவிரவாதிகள் அவர்களின் ஆதரவாளர்கள் ஒன்று கூடி இதைச் செய்திருக்க கூடாது??? ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கையே சந்தேகித்த கயவர்கள் இன்று கரிசனம் காட்டும் பெயரில் ராணுவ வீரர்களின் உயிரை வைத்து மிகவும் கீழ்த்தரமான இழிவு அரசியல் செய்வதை ஜீரணிக்க முடியாது!ஜெய்ஷ்-இ-முஹம்மது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளபோதிலும், இதிலும் வெறுப்பு விஷத்தை மோடி, காவிகள் மீது உமிழும் போதே தெரியவில்லையா இந்த நாட்டின் மிகச்சிறந்த பாதுகாப்பாளர்கள் மோடி
Rate this:
Cancel
Godwin jose - chennai,இந்தியா
18-பிப்-201900:00:57 IST Report Abuse
Godwin jose கட்டின மனைவியை காப்பாற்ற முடியாத வன் எப்படி நாட்டை காப்பாற்றுவான் அவருக்கு நாற்க்காலி தான் வேணும். இரண்டு நாள் தன் பரப்புரையை ஓரமாக வைத்துவிட்டு நடக்க வேண்டிய வேலையை பார்க்கிரார நாய் மாதிரி கத்தி கத்தி இருக்கிறாரே தவிர இவரால் நாட்டிற்க்கு என்ன பயன் ?
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
17-பிப்-201920:35:35 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்பதை தமிழ்நாடு பிஜேபி தலைவி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்க்கு மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வரவேண்டுமாம் . சரி ..இப்போது யாருடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது ?.. இவர்களுக்கு இராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததை விட மோடி ஆட்சிக்கு வரவேண்டுமாம். மக்கள் காஷ்மீரில் நடந்த வன்முறையை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் பொழுது, மோடி தான் ஆட்சிக்கு வரவேண்டுமாம். இது தான் கலங்கிய நீரில் மீன் பிடிப்பதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X