காஷ்மீர் தாக்குதல்: மக்களின் கோபம் என்னிடமும் உள்ளது: பிரதமர் மோடி| Fire raging in your bosoms is in my heart too: PM | Dinamalar

காஷ்மீர் தாக்குதல்: மக்களின் கோபம் என்னிடமும் உள்ளது: பிரதமர் மோடி

Updated : பிப் 17, 2019 | Added : பிப் 17, 2019 | கருத்துகள் (33)
Share

பரவுனி: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, மக்கள் மனதில் எரியும் நெருப்பானது எனது மனதிலும் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.latest tamil newsபீஹார் சென்றுள்ள பிரதமர் மோடி பரவுனியில் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.

பின்னர் பிரதமர் பேசுகையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்தன் குமார் தாகூர் ஆகியோருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். இங்கு ஏராளமான மக்கள் கூடியுள்ளீர்கள். புல்வாமாவில் நடந்த தாக்குதலால், உங்கள் மனதில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது, எனது இதயத்திலும் உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.


latest tamil newsஇந்த கூட்டத்தில் பங்கேற்ற பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் ஆகியார், புல்வாமா தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X