அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
லோக்சபா, தேர்தலில், ரஜினி, கட்சி, போட்டியில்லை,கைவிரிப்பு!

சென்னை:யாருடன், நடிகர் ரஜினி கூட்டணி வைப்பார் என, பல தரப்பிலும் விவாதங்கள் நடந்து வந்த நிலையில், 'லோக்சபா தேர்தலில் போட்டியில்லை' என, நேற்று அவர் அறிவித்துள்ளார். 'லோக்சபா தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை' என, விளக்கம் அளித்துள்ள ரஜினி, 'சட்டசபை தேர்தலே தங்கள் இலக்கு' என்றும், கூறியுள்ளார்.ஜெ., மறைவுக்கு பின், தமிழக அரசியலில் களம் இறங்கிய, நடிகர் ரஜினி, 2018 துவக்கத்தில், கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்தார்.
அதற்கு முன், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, 'ரஜினி மக்கள் மன்றம்' துவக்கினார். இதில், ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் பணியில், நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதனால், லோக்சபா தேர்தல் களத்தில், ரஜினி குதிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு, காங்., - தி.மு.க., கூட்டணி உறுதியாகி விட்டது. பா.ஜ, - அ.தி.மு.க., கூட்டணி பேச்சில், தொகுதி உடன்பாடு நெருங்கியுள்ளது. பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடனும், பா.ஜ., - அ.தி.மு.க., தரப்பில் பேச்சு நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கான பணிகளில், அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வரும் நிலையில், ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும்; எந்த கூட்டணியில் இணைவார்; எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்றெல்லாம், அரசியல் வட்டாரத்தில், பல்வேறு கேள்விகள் எழுந்தன. 'லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை; எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை'

என, ரஜினி, நேற்று திடீரென அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:வரும் லோக்சபா தேர்தலில், நான் போட்டியிட போவதில்லை. தமிழக சட்டசபை தேர்தல் தான் எங்கள் இலக்கு. வரும் லோக்சபா தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது. அதனால், ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரையோ, கொடியையோ, என் படத்தையோ, யாருக்கும் ஆதரவாக, பிரசாரம் செய்ய பயன்படுத்தக் கூடாது.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை முக்கியமாக உள்ளது. மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து, யார், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை நிரந்தமாக தீர்த்து வைப்பர் என, பாருங்கள். தண்ணீர் பிரச்னையை தீர்க்கக்கூடிய திட்டங்களை வகுத்து, யார் அதை உறுதியாக செயல்படுத்துவர் என, நம்புகிறீர்களோ, அவர்களுக்கு, நீங்கள் சிந்தித்து, ஆராய்ந்து, தவறாமல் ஓட்டு போட வேண்டும்.இவ்வாறு, ரஜினி கூறியுள்ளார்.

பின்னணி என்ன?


நேற்று காலை, போயஸ் கார்டனில் உள்ள தன்

இல்லத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின், மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, ரஜினி நடத்தினார். இதில், 32 மாவட்ட செயலர்கள், மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகே, ரஜினியின் அறிக்கை வெளியானது.இது குறித்து, ரஜினி மன்றத்தினர் கூறியதாவது:
ரஜினி, சாதுர்யமான முடிவை எடுத்துள்ளார். லோக்சபா தேர்தலில், மக்கள் முடிவு எப்படி அமைகிறது என, அமைதியாக இருந்து, பார்க்க உள்ளார். அதன் பின், கட்சியை அறிவித்து, அதிரடியாக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாவதே, ரஜினியின் எண்ணம். இது, நிச்சயம் அவருக்கு சாதகமாக அமையும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஸ்டாலின் கிராம சபை கூட்டம்நடிகர் கமல் கடும் விமர்சனம்


சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், கல்லுாரி,மாணவ - மாணவியர் பங்கேற்ற நிகழ்ச்சியில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர், கமல் பேசியதாவது:'மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை' என சொல்வதை, நான் ஏற்க

மாட்டேன். மாணவர்களை போல, நாட்டில் அனைவருக்கும் அரசியல் தேவை. ஜாதி பெருமை பேசக்கூடாது என, எனக்கு வீட்டில் கற்றுக் கொடுத்தனர்; அதற்காக, பெருமைப்படுகிறேன்.
ஜாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தாலே, கலவரம் குறையும்.முதல்வர் என்பவர், மக்களுக்காக உழைக்கும் அதிகாரி. ஆட்சியில் இருப்பவர்கள், ஐந்து ஆண்டுகள் சரியாக ஆட்சி செய்கின்றனரா என்பதை கவனியுங்கள். யாருக்கு வேண்டுமானாலும், ஓட்டு போடுங்கள்; ஆனால், நிச்சயம் ஓட்டு போடுங்கள்.சட்டசபையில், சட்டையை கிழித்துக் கொள்ள மாட்டேன்; அப்படி சட்டையே கிழிந்தாலும், நல்ல சட்டை போட்டுத் தான் வெளியில் வருவேன்.
இந்த சின்னப் பையன் அரசியலுக்கு வந்து, கிராம சபை கூட்டம் நடத்திய பின், அதை காப்பியடித்து, அப்படியே நடத்துவது சரியல்ல.தி.மு.க.,வை, நான் கடுமையாக விமர்சிக்க, அந்த கட்சியே காரணம். மறைமுகமாக அல்ல; நேரடியாகவே, தி.மு.க.,வை விமர்சிக்கிறேன். கட்சியை துவக்கி விட்டு, தேர்தலில் போட்டியிட மாட்டேன் என, சொல்வது முறையல்ல. வாழ்க்கையில், சிறு சிறு விஷயங்களில் விட்டுக் கொடுத்து போக வேண்டும்.
அரசியல் மாண்பின் கடைசி கோட்டைச்சுவர், மாணவர்கள். தமிழகத்தில், அரசியல் என்ற குழந்தை தடுமாறுகிறது; மாணவர்களால் தான், அதை சரி செய்ய முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-பிப்-201903:37:35 IST Report Abuse

meenakshisundaramஅப்போ கமலுக்கு வாக்கு கொடுக்க சொல்லி அறிக்கை வெளியிடலாமில்லே ?

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-பிப்-201900:03:15 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பாஜகவுக்கு நோ(ட்) டா.. வர்ட்டா..

Rate this:
Senthil - Chennai,இந்தியா
18-பிப்-201919:51:32 IST Report Abuse

Senthil Rajinikanth is very good man compare than all politicians and people. Deifinatly he will become Tamil Nadu CM.

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X