அரைகுறை தகவல்கள்... முடிவு வரட்டும்!

Added : பிப் 17, 2019
Advertisement

அடுத்த லோக்சபா வருவதை ஒட்டி, தற்போது உள்ள லோக்சபா, தன் காலத்தை முடித்திருக்கிறது. இது, பிரதமர் மோடி தலைமையில், தனிக்கட்சி ஆட்சி நடந்த காலம். இனி அடுத்த லோக்சபா, புதிய ஆட்சியுடன் துவங்கும்.பிரதமர் மோடி, தனக்கு லோக்சபா அனுபவம் புதிது என்ற பார்வையில், பதவியேற்ற முதல் நாளில், தரையைத் தொட்டு வணங்கியவர், கடைசி நாள் உரையில், இந்திய அரசின் பெருமையை, இந்த அரசு உயர்த்தியதையும், பொருளாதார அடிப்படையில் நாடு, உலக அரங்கில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்று உள்ளதையும் குறிப்பிட்டிருக்கிறார்.பா.ஜ., கட்சியை உருவாக்கிய தலைவர்களில், தீனதயாள் உபாத்தியாயா, அன்றைய காலத்தில் உருவாக்கிய சில பண்புகளை, இன்று வரை பல தலைவர்கள் கட்டிக் காத்ததால், அக்கட்சி வெறும், இரு எம்.பி.,க்கள் என்ற கதை மறக்கடிக்கப்பட்டது. அதிலும், 'கூட்டணி தர்மம்' என்ற நேயம்மிக்க கட்சிகளை அரவணைத்து செல்லும் பண்பு, வாஜ்பாய் பிரதமரான பின் அமலானது.அவர், மக்களுக்கு செய்த சில முன்னோடி திட்டங்கள் சிறப்பானவை. பார்லிமென்ட் அரங்கில் அதற்கு அடையாளமாக, அவர் படத்திறப்பும் தற்போது நடந்திருக்கிறது. ஆனால், காந்தி விரும்பிய சுதேசி அல்லது துாய்மை திட்டத்தை இந்த அரசு பரப்பியது, நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும்.ஒரு குடும்பத்தினர் ஆட்சி அல்லது சில தலைவர்கள் ஜனநாயகத்தை, 'பணநாயகம்' ஆக்கிய காலம் மாற்றப்பட்டது. அதன் அடையாளமாக, காங்., தலைவர் ராகுல் முதல் பலர், கோர்ட் வாசலில் நின்று மன்றாட வேண்டிய நிலையும், ஊழல் என்பது, நிர்வாகத்தில் புரையோடிப் போனது என்பதையும், மோடி நிரூபித்திருக்கிறார்.'டீ வியாபாரி, சாதாரண காவல்காரன், கொள்ளைக்காரன், ரபேல் ஊழலில், 30 ஆயிரம் கோடி ரூபாயை அபகரித்தவர்' என, பதவிக்காலம் முழுவதும், மோடி கேட்காத வார்த்தைகளே இல்லை. ஆனால், ஜாமினில் வெளிவர அவசரம் அவசரமாக, நீதிமன்றங்களுக்கு படையெடுக்கும் காங்., தலைவர்கள் பலரது பரிதாபம், அதிக வாய்ஜாலம் கொண்ட லாலு போன்றவர்களின் சிறை வாசம் ஆகியவை, இந்த நான்கு ஆண்டுகளில், மக்கள் கண்ட காட்சிகள்.அதைவிட, உ.பி.,யில் உள்ள தலைவர்களில் முக்கியமான முலாயம் சிங், 'மீண்டும் மோடி வெற்றி பெறுவார், ஆட்சியில் அமர்வார்' என, லோக்சபாவில், கடைசி நாளில், திடீரென பதிவு செய்தது, கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு எரிச்சல் தரலாம். சபையில் அப்போது, ராகுல் இல்லை. ஆனால், சோனியா அதைக் கேட்டு அதிர்ந்ததைக் காண முடிந்தது.பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், 2 லட்சம் மோசடிக் கம்பெனிகள் கண்டுபிடிக்கப்பட்டன; வரி கட்டுபவர் எண்ணிக்கை அதிகரிப்பு; விவசாயிகள் விஷயத்தில், ஆறுதல் நடவடிக்கைகள் தாண்டி அரசு செயல்பட்ட விதம்; குறைந்த அளவில் கூடிய வட்டியுடன் சிறு, குறு தொழில்களுக்கு கடன்; வங்கிகள் கடன் தரும் முறையில், சீரான அணுகுமுறை காண ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள்; உலக நாடுகள் பல இந்தியாவை, ஒரு சிறந்த ஜனநாயக நாடாக மதிக்கும் மனோபாவம் ஆகியவற்றை, இனி எந்த அரசு வந்தாலும், எளிதில் மாற்ற முடியாது.ஏனெனில், ஆட்சியை இழந்த காங்கிரஸ், எப்படி எல்லா நிலைகளிலும், நாளுக்கு ஒரு பொய் தகவல் அளித்தது என்பதற்கு, ரபேல் விமான விவகாரம் ஒரு உதாரணம். இந்த விஷயத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, அதற்குப் பின் கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் வந்த பின்னும், இன்னமும் இதே புகாரைக் கூறுகின்றனர்.மேலும், முன் ஏதோ, 'ஹெலிகாப்டர்' வாங்கும் விஷயத்தில் வந்த பிரான்சின், 'இ - மெயிலை' அறியாத ராகுல், தங்களது, 10 ஆண்டு ஆட்சியில், சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்ட போர் விமானங்களை வாங்கவில்லை என்பதை மறந்து, தற்போதைய விஷயத்தை ஊழலாகப் பார்ப்பதும், திரும்பத் திரும்பக் கூறுவதும், அதை அரைகுறைத் தகவல்களுடன் ஆதரித்த சில மீடியாக்களும், எதிர்காலத்தில் நம்பகத் தன்மை தகவல்களுக்கு இலக்கணமாக இருப்பது சிரமம்.பிரதமர் மோடி, சாதாரணமானவர் என்பது உண்மை. அவரை அடுத்த அரசில் பிரதமராக்காமல், அதே கட்சியை சார்ந்த கட்கரி அல்லது வேறு ஒருவர் தலைவர் என்றால், அது அன்றைய சூழ்நிலையில், அலசப்பட வேண்டியதாகும். மாறாக, ராகுல் அல்லது காங்கிரஸ் உத்திகளை அறிய முயலும் பிரியங்கா வாத்ரா அல்லது, 'நான் இறக்கும் வரை மோடியை எதிர்ப்பேன்' என்ற மம்தா போன்றவர்கள், இன்றைய இந்திய சூழ்நிலையில் பிரதமராகலாம் என்றால், அந்த ஜனநாயக முடிவும், ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒன்றே!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X