காயமடைந்த பெண் நக்சல்; ரத்தம் கொடுத்த சிஆர்பிஎப் வீரர்கள்

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (14) | |
Advertisement
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், காயமடைந்த பெண் நக்சல் உயிரைக் காப்பாற்ற, சி.ஆர்.பி.எப். எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், ரத்த தானம் செய்தனர்.கண்ணி வெடி:ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. நக்சல் பிரச்னை உள்ள இந்த மாநிலத்தில், மேற்கு சிங்பம் மாவட்டத்தில், நக்சல்
CRPF,jawans,donates,blood,Naxal,Jharkhand,நக்சல்,ரத்தம்,சிஆர்பிஎப் ,வீரர்கள்

ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், காயமடைந்த பெண் நக்சல் உயிரைக் காப்பாற்ற, சி.ஆர்.பி.எப். எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், ரத்த தானம் செய்தனர்.


கண்ணி வெடி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. நக்சல் பிரச்னை உள்ள இந்த மாநிலத்தில், மேற்கு சிங்பம் மாவட்டத்தில், நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூடியுள்ளதாகவும், நாசவேலையில் ஈடுபட உள்ளதாகவும், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


latest tamil news


அதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், மாநில போலீஸ் அடங்கிய குழு, வனப் பகுதியை சுற்றி வளைத்தது. அங்கு, 24 நக்சல்கள் கூடியிருந்தனர். சரணடையும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்த நக்சல்கள், துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.

சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நக்சல்கள் தப்பிச் சென்றனர். அந்தப் பகுதியில் நடத்திய சோதனையின்போது, ஒரு பெண் நக்சல், பலத்த காயங்களுடன் இருப்பதை, பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த பெண் நக்சல், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


வனப்பகுதி:

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண் நக்சலுக்கு, மூன்று, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ரத்த தானம் செய்தனர். இதற்கிடையில், வனப்பகுதியில் இருந்து, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வீரர்கள் கைப்பற்றினர். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த, நக்சல் முகாம்களையும் அழித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
18-பிப்-201915:12:16 IST Report Abuse
R S BALA நிச்சயமாக வீரர்கள் இவர்களுக்கு எவ்விதத்திலும் உதவுதல் கூடாது .. இந்திய வீரர்கள் இறப்பின் செய்தி ஒவ்வொன்றும் இடி வந்து இதயத்தில் விழுவது போல் உள்ளது .. கொடிய விஷமுடைய பாம்பை விட மோசமானவர்கள் இந்த நக்ஸல்களும் மத தீவிரவாதிகளும் . இவர்களை வேரோடு அழியுங்கள் எம் வீரர்களே.
Rate this:
Cancel
18-பிப்-201915:02:44 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மனிதாபிமானத்திற்கு தகுதியற்றவர்கள் துரோகிகள். எதிரிகளுக்கு மனிதாபிமானம் காட்டலாம் காரணம் அவனும் நம்மை போல அவன் நாட்டிற்காக போரிடுகிறான் , ஆகவே தான் போரில் இறந்த எதிரிகளின் உடலை அவமானப்படுத்தக்கூடாது , மரியாதையுடன் ஒப்படைக்க வேண்டும் என்று போர் தர்மம் சொல்கிறது. ஆனால் துரோகிகள் இந்த நாட்டில் வாழ்ந்துகொண்டு இந்த நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள்.
Rate this:
Cancel
Sangeedamo - Karaikal,இந்தியா
18-பிப்-201912:35:31 IST Report Abuse
Sangeedamo இந்திய CRPF வீரருக்கு தலை வணங்குகிறேன்... அதே சமயம் உங்களை (வீரர்கள்) பாதுகாத்து கொள்வது என்பது தங்களின் தலையாய கடமை மட்டும் அல்ல தங்களின் பாதுகாப்பில்தான் இந்திய தேசமே வளப்படும் என்பதை மறவாதீர்... மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது அல்ல.. எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் இந்த நாட்டின் பொக்கிஷங்கள்... அதனை வீணடிக்கவோ... விரயமாக்கவோ வேண்டாம் கொலை மற்றும் கொள்ளைக்காரனுக்கும், துரோகிகளுக்கு தயவு காட்டி எங்கள் சகோதரர்களே நீங்கள் பலியாவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது... அங்கு போகும் ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு சொந்தமானது என்பதை மறவாதீர்... கடையெடுத்த அயோக்கியனிடம் கருணை காட்டுவதென்பது நம் பாதுகாப்பிற்கு நாமே கொல்லி வைத்து கொள்வதாக மாறிவிடும்... தங்களின் மனித நேயமும், வீரமும் ஒரு நாளும் வீண்போக அனுமதியாதீர்... விழிப்புடன் செயல்படுங்கள் வீரர்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X