லோக்சபா கூட்டணி; விட்டுக் கொடுக்கிறது அ.தி.மு.க.?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா கூட்டணி; விட்டுக் கொடுக்கிறது அ.தி.மு.க.?

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 18, 2019 | கருத்துகள் (85)
Advertisement
லோக்சபா,கூட்டணி,விட்டுக் கொடுக்கிறது,அ.தி.மு.க.?

புதுடில்லி : லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சு, நடத்தப்பட்டு வருகிறது.

கூட்டணி வலுப்பட வேண்டும் என்பதால், பா.ஜ., விரும்பி கேட்கும் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க, அ.தி.மு.க., முன் வந்து உள்ளது.தென் சென்னை தொகுதியில், மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமாரின் மகனும், தற்போதைய, எம்.பி.,யுமான, ஜெயவர்தன் போட்டியிட விரும்புகிறார்.





தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை போட்டியிட, இந்த தொகுதியை, பா.ஜ., கேட்கிறது. கோவை தொகுதியில், முன்னாள் அமைச்சர், செ.ம.வேலுசாமி போட்டியிட விரும்புகிறார்; தேசிய இளைஞரணி துணை தலைவர், முருகானந்தம் போட்டியிட, பா.ஜ., அத்தொகுதியை கேட்கிறது.




பிரச்னைக்குரிய இந்த இரு தொகுதிகளில், தற்போது, தென் சென்னையை விட்டுக் கொடுக்க, அ.தி.மு.க.,வும்; கோவையை விட்டுக் கொடுக்க, பா.ஜ.,வும் முன்வந்துள்ளன. இதனால், பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, ஓரிரு நாட்களில், கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என, கட்சி வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

- நமது நிருபர் -





வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narasimhan - Manama,பஹ்ரைன்
20-பிப்-201917:54:57 IST Report Abuse
Narasimhan எப்படியும் தாங்கள் ஜெயிக்கபோவதில்லை என்று தெரிந்து விட்டது. முழுதும் தோற்றால் மற்ற கட்சிகள் மீது பழி சுமத்தலாம் அல்லவா
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
19-பிப்-201903:48:49 IST Report Abuse
meenakshisundaram தேசிய நலனே முக்கியம்.சரியே .
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-பிப்-201900:13:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் முகிலன் எங்கே?
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
19-பிப்-201910:56:37 IST Report Abuse
Jaya Ramஅவர் எங்கே போனால் என்ன அவருடைய குடும்பம் அவரை பார்த்துக்கொள்ளும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X