ராணுவ வீரர்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் : 4 வீரர்கள் வீரமரணம்

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 18, 2019 | கருத்துகள் (73)
Advertisement

ஜம்மு : காஷ்மீரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் இன்று (பிப்.,18) காலை, ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் சுட்டதில் ஒரு மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் ஒரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 3 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பிப்., 14 அன்று புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து பயங்கரவாதிகள் கொடூரமான முறையில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நடத்தப்பட்டு 4 நாட்ளே ஆன நிலையில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-பிப்-201918:49:46 IST Report Abuse
Pasupathi Subbian காஷ்மீரில் இரண்டு மாநிலத்தில் உள்ள மக்களில் சுமார் 8 % மட்டுமே தீவிரவாதிகளாக உள்ளனர் என்ற புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது . அதிலும் இந்த முப்தி முகமது சயீத் அவர்கள் ஆட்சியில், பற்பல சலுகைகள், ஓட்டைகளை உருவாக்கிவிட்டுள்ளார். இனி இந்த ஓட்டைகளை அடைக்கவேண்டியது மத்திய அரசின் கடமை. அப்படி அடைபட்டால்தான் ராணுவம் முழுமூச்சாக இறங்கும். இல்லையேல் எதையேனும் நீதிமன்ற நடவடிக்கை வருமோ என்ற பயம் .
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
18-பிப்-201913:58:33 IST Report Abuse
Ramesh If Pakistan is fighting with Indian Army , we can face easily ...Pakistan has lost all wars with India(4 or 5)...As they got frustrated , Pakistan Army, devised a strategy called PROXY WAR in which they will provide training, money , logical support etc to creating issues across countries (India, Iran, Afghanistan etc).Many locals are also involved in the whole chain ....Money making business...They are using as religion for the same...Pakistan army is funded across many middle east countries for doing so...Pakistan Army is just representative of all these group and Pakistan Army is not representative of Pakistan Country and it's people...This strategy was devised after 1971 humiliating defeat...Congress, NC, PDP etc speaks in money tongue in India towards Kashmir issue...People are doing stone pelting for just money not for anything else...Business...Pakistan Army rules Pakistan and not civilian government...If Civilian government act against interest of Army, either they will be killed or put in jail or made irrelevant...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-பிப்-201913:04:19 IST Report Abuse
Nallavan Nallavan சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்த அச்சத்தால் ஓடுகிறார்கள் என்றும் செய்திகள் வரும் நிலையில் இந்தச் செய்தியின் தலைப்பு வியப்பளிக்கிறது ....
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
18-பிப்-201913:47:27 IST Report Abuse
வல்வில் ஓரி மத அடிப்படையில் நிலத்தை பிரிப்பது என்பது கொள்கையாக இருக்கும் பட்ஷத்தில் இது நடந்துக்கிட்டே தான் இருக்கும்.....இனிமே நாம காஷ்மீரை விட்டு கொடுக்க முடியுமா..? ...தக்காளி ரெண்டுல ஒன்னு பார்த்துற வேண்டியது தான்....
Rate this:
Share this comment
தா்மசிந்தனை - chennai,இந்தியா
18-பிப்-201914:18:57 IST Report Abuse
தா்மசிந்தனைநண்பரே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்த அச்சத்தால் பாக்., பயங்கரவாதிகள் பாக் எல்லை பகுதிகளில் இருந்து, அருகில் உள்ள ராணுவ முகாம்களுக்கு, பாக்., அரசு இடம்பெயரச் செய்துள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன பாக் எல்லை பகுதிகளில் இருந்து தான் ஓடினார்கள் கஷ்மிருக்குள் இருந்து அல்ல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X