மீண்டும் பேச்சுவார்த்தை: நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 18, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

புதுச்சேரி : மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.



latest tamil news



துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் பிப்.,13 ம் தேதி முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். கவர்னர் மாளிகை முன் அமைச்சர்களுடன், கருப்பு சட்டை அணிந்தபடி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். தொடர்ந்து 6வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நாராயணசாமி, கிரண்பேடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாராயணசாமிக்கு, கிரண்பேடி அழைப்பு விடுத்தார். ஆனால் நாராயணசாமியின் கோரிக்கைகளை ஏற்க கிரண்பேடி மறுத்து விட்டார்.


latest tamil news



இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும் படி நாராயணசாமிக்கு, கிரண்பேடி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். கவர்னர் மாளிகையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். கிரண்பேடியின் அழைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளோம். துணைநிலை கவர்னருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-பிப்-201903:34:16 IST Report Abuse
meenakshisundaram நாராயண சாமி ஆளுநரிடம் 'அம்மா கொஞ்சம் போட்டுக்கொடுங்க என்று கெஞ்சியாவது தனது நிலையைக்காப்பற்றிக்கொண்டு அறிய ஜனநாயத்தை காப்பாற்ற வேண்டும்.ஆமாம் .இவர் தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்கிறாரே இவனுங்க என்ன வாக்குறுதி வேணும்னா கொடுப்பாங்க அதை ஆளுநர் காப்பாற்ற வேண்டும்னு உண்டா?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
18-பிப்-201918:20:59 IST Report Abuse
Vijay D Ratnam மேடம் விடுங்க, நாராயணனும் பொழப்பு நடத்த வேண்டாமா? ஒரு தடவை பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டீங்க, அதோடு விடுங்க திரும்ப திரும்ப அழைப்பு விடாதீங்க. அந்தளவுக்கு நம்மாளு வொர்த் இல்லே. அவரு கட்சில அவருக்கு பிரச்னை. ஒத்தனும் ஒத்த ரூவா பாக்கமுடியால. போட்ட காச கூட எடுக்க முடியாது போல இருக்குது. இது மாதிரி மறியல், தர்ணா, கண்டனம், போராட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் இப்படியே நடத்திக்கொண்டிருக்காவிட்டால், அப்புறம் இருக்குற பதவியும் போயிடும்.
Rate this:
Cancel
18-பிப்-201917:11:17 IST Report Abuse
செய்யாறு மு. கருணாகரன் துணை நிலை ஆளுநர் அழைப்பில் முக்கியத்துவம் உள்ளது ,ஆகவே அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் முதல்வரின் முடிவு சரியானது .வாய்மையே வெல்லும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X