மீண்டும் பேச்சுவார்த்தை: நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு| Dinamalar

மீண்டும் பேச்சுவார்த்தை: நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 18, 2019 | கருத்துகள் (17)
Share

புதுச்சேரி : மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.



latest tamil news



துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் பிப்.,13 ம் தேதி முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். கவர்னர் மாளிகை முன் அமைச்சர்களுடன், கருப்பு சட்டை அணிந்தபடி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். தொடர்ந்து 6வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நாராயணசாமி, கிரண்பேடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாராயணசாமிக்கு, கிரண்பேடி அழைப்பு விடுத்தார். ஆனால் நாராயணசாமியின் கோரிக்கைகளை ஏற்க கிரண்பேடி மறுத்து விட்டார்.


latest tamil news



இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும் படி நாராயணசாமிக்கு, கிரண்பேடி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். கவர்னர் மாளிகையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். கிரண்பேடியின் அழைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளோம். துணைநிலை கவர்னருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X