பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் என்கவுன்டர்; டி.ஐ.ஜி., காயம்

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 18, 2019 | கருத்துகள் (86)
Advertisement

ஜம்மு : புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதிக்கு அருகே, இன்று காலை பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர். பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீர் தெற்கு டி.ஐ.ஜி., அனந்த்குமார் காயம் அடைந்தார்.


கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும், 44 வீரர்கள் வீரமரணம் அடைய காரணமான பிப்.,14 அன்று ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பிய காரை மோத செய்த பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த இவர்கள் தாக்குதலுக்கு பயன்படுத்திய அதிநவீன கருவிகளையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவம் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இந்நிலையில் துப்பாக்கிச்சண்டை நடக்கும் பகுதியில் காஷ்மீரைச் சேர்ந்த கல்வீச்சாளர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். அப்பகுதியில் அனைவரும் அமைதி காக்கும்படி பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். துப்பாக்கிச்சண்டை நடக்கும் பகுதியில் கல்வீச்சாரளர்கள் அதிக அளவில் குவிந்துள்ளது அங்கு பதற்றத்தை அதிகரித்து உள்ளது. அனைவரையும் கலைந்து செல்லும்படி பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
19-பிப்-201904:22:25 IST Report Abuse
natarajan s நிறையபேர் இஸ்ரேல் போல் கல் வீசுவர்களை சுட்டு தள்ளனும் என்று கருது தெரிவிக்கிறார்கள். இஸ்ரேல் ராணுவத்தின் மீது கல் வீசும் பாலஸ்தீனர்களின் வீட்டின் readymix concrete மெஷினை வைத்து வீட்டிற்குள் கான்க்ரீடை கொட்டி வீட்டிற்குள் ஆள் இருந்தாலும் இல்லையென்றாலும் வீட்டை அடைத்து விடுவார்கள். அங்குள்ளோருக்கு அந்த கான்க்ரீடை உடைத்து எடுக்கவே நேரம் இருக்காது. பின் எங்கிருந்து மீண்டும் கல் எறிவது. அதுபோல் இங்கும் எதாவது செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவில் ஒத்து சாத்தியம் இல்லை நீதி மன்றம் என்று ஒன்று உள்ளது. அதர்க்கு article 32 மற்றும் 226 படி inherent powers உள்ளதால் எதிலும் அவர்கள் தலை இடலாம்.. முதலில் அங்குள்ள கல்வி கூடங்களை முறையாக நிர்வகித்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து போகும். வேலையற்ற இளைஞர்கள் கல் வீசினால் காசு கிடைக்கும் என்று அதில் ஈடுபடுகிறார்கள் . மேலும் இஸ்ரேல் மாதிரி நாம் நடவடிக்கை எடுக்க முடியாது, அவர்கள் உலகத்தின் பெரும்பான்மையான மதத்தின் பின்னணி உள்ளது. நாம் பெட்ரோலிய நாடுகளின் தயவில் உள்ளோம்.உண்மையில் இந்துக்கள்தான் சிறுபான்மையினர்.பலவற்றையும் மத சார்பற்ற கொள்கை என்ற பெயரில் விட்டு கொடுத்தே பழகிவிட்டோம். ஓட்டுக்காக பல அரசியல் கட்சிகள் முஸ்லீம் மக்களை பகைத்துக்கொள்ள மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
18-பிப்-201920:50:39 IST Report Abuse
S.kausalya Some said common is mingled with this stone throwing culprits. So don't act harshly.Why this so called common man came there . Whether to see how they throw stone correctly to the army. These terrorist take this common man as their sheild. So they helped these terrorist indirectly. they should also be encounted.
Rate this:
Share this comment
Cancel
Sathish Prem - kanchipuram,இந்தியா
18-பிப்-201919:23:49 IST Report Abuse
Sathish Prem ரொம்ப பணக்கார தீவிரவாதி ஆக இருப்பாங்க போல ....உடை எல்லாம் ரொம்ப விலை அதிகம் இருக்கும் போல ..எல்லா அரசாங்க சலுகை நீக்க வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X