பொது செய்தி

இந்தியா

புல்வாமா தாக்குதல்: ராணுவத்தின் அடுத்த வேட்டை யார்?

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 18, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement

புதுடில்லி: காஷ்மீரில் புல்வாமாவில் நமது ராணுவத்தின்ர் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலை படை தாக்குதலுக்கு காரணமாவர்கள் யார் என ராணுவம் கண்டுபிடித்து விட்டது. அவர்களை வேட்டையாடும் பணி இன்னும் தீரவம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.latest tamil news


ஏற்கனவே பாக்.,கில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜெ.இ.எம்.,), இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதை இப்போது நமது ராணுவமும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த அமைப்பின் பாக்.,கில் உள்ள கைபர் பகுதியின் கமாண்டராக இயங்கி வரும் நுாசுர் மவுல்வி வாதா குஹாசி என்பவன் முக்கியமான காரணம் என்று ராணுவம் கண்டுபிடித்து உள்ளது.


latest tamil newsகுஹாஷி தான், ஜெ.இ.எம்., இயக்கத்தை சேர்ந்த காஸி என்பவனிடம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தும் பொறுப்பை ஒப்படைத்துள்ளான். (இந்த காஸி இன்று (18.2.19) காலை நடந்த ராணுவ வேட்டையில் கொல்லப்பட்டான்).


காட்டை விட்டு நாட்டுக்குள்


ராணுவத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பகிரப்படுகிறது. ராணுவம் தாக்குதல் நடத்தும் என அஞ்சி காடுகளுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பலர், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தினாலும் நடத்தும் என அஞ்சி, எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாதி காஸி யார் ?


காஸி, பாக்.,கில் உள்ள கைபர் பகுதியை சேர்ந்தவன். அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கானும் அதே பகுதியை சேர்ந்தவர் தான். காஸிக்கும் லஷ்கர் இ தொய்பா இயக்க தலைவர் ஹபீஸ் சயீதுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. காஸிக்கு வெடிகுண்டு செய்யும் பயிற்சியை குஹாஷியே அளித்துள்ளான். பாக்., பழங்குடி பகுதிகளில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய அனுபவம் உள்ளவன். பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக மாணவர்களை திரட்ட முயன்றவன்.
ஆதில் அகமது தர் என்பவனுக்கு தற்கொலை படை தாக்குதல் நடத்த தேவையான பயிற்சி, வெடிமருந்து கொடுத்தது காஸி தான். ஆதில், முன்பு அல் கொய்தாவில் இயங்கி விட்டு, பின்பு ஜெ.இ.எம்.,முக்கு மாறியவன்.குஹாஷிக்கும் காஸிக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபன்களுடன் தொடர்பு இருந்தாலும், இவர்களை கட்டுப்படுத்துவது பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தான்.
ஆப்கனில் அமைதி ஏற்பட அமெரிக்க தலைமையில் அங்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் பின்னணியில் தான் காஷ்மீரில் தாக்குதல் நடந்துள்ளது. ஆப்கனில் ஏராளமான முதலீடுகளை செய்து பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இதையும் சீர்குலைக்கும் விதமாகத் தான் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆப்கனில் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்களுடன் பாக்., ராணுவ துணையோடு அமெரிக்கா பேசி வருகிறது. இந்நிலையில் ஆப்கனில் இருந்த பயங்கரவாதம் காஷ்மீருக்கு மாறி விடக்கூடாது என்ற அச்சமும் நிலவுகிறது.


தற்கொலை படை ஸ்டைல்


தற்கொலை படை தாக்குதல் நடத்துவது தலிபன் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்., வழக்கம். புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலும் இந்த பாணியில் தான் நடந்துள்ளது.காஷ்மீரில் பணிபுரிந்த ஒரு ராணுவ அதிகாரி கூறும்போது, ‛‛இது ஒரு கவலை அளிக்கும் விஷயம். வெடிமருந்தை நிரப்பிய வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் மோத வைக்க முடியும். அதை முன் கூட்டியே அறிந்துகொள்வது கடினம்'' என்றார்.
சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை உள்ளூர் ஆட்கள் மூலம் வாங்கி, வெடிமருந்து தயாரிப்பது தான் பொதுவான வழக்கம். ஆனால், புல்வாமா தாக்குதலில், அனைத்து உதவிகளையும் பாக்.,கில் உள்ள ஜெ.இ.எம்., செய்து தந்துள்ளது. தற்கொலை படை தாக்குதல் நடத்துவோருக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டு மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் காஷ்மீரில் பல பயங்கரவாதிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர்.


ஜெ.இ.எம்., இயங்குவது எப்படி

ஜெ.இ.எம்., முழுக்க முழுக்க பாக்.,கில் இருந்து இயங்குகிறது. தலைவர் மசூத் அசார். 1999ல் கந்தகார் விமான கடத்தலின் போது, பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக ஜம்மு சிறையில் இருந்து அசார் விடுவிக்கப்பட்டான்.2016, ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படை முகாம் மீதும், 2016ல் உரி ராணுவ முகாம் மீதும் தாக்குதல் நடத்தியது ஜெ.இ.எம்., தான்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
19-பிப்-201905:27:33 IST Report Abuse
natarajan s முன்பு எல்லாம் இதுமாதிரி தீவிரவாதிகளையோ பயங்கரவாதிகளையோ நமது ராணுவம் பிடித்தால் காஷ்மீர் காவல்துறையினரிடம் ஒப்படைத்து விடும் (ராணுவத்திரத்திற்கு prosecution power கிடையாது ) நமது நீதிமன்றங்கள் பாஸ்போர்ட் Act அல்லது explosives act படி வழக்கு நடத்தி ஜாமீனில் விட்டு வந்தனர். மீண்டும் அவர்கள் வழக்கம் போல் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். நரசிம்ம ராவ் காலத்தில் sharaar e shariff என்ற மசூதியில் (பின்னர் இதுமாதிரி hazarat paal மசூதியிலும் நடந்தது ) வெள்ளிக்கிழமை தொழுகையின் போது சில பயங்கரவாதிகள் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை பிணையாக வைத்து அரசுக்கு demand வைத்தனர் . ராணுவம் சுற்றி வளைத்து நடவடிக்கை எடுக்க தயாரானது (அப்போது நமது உச்ச நீதிமன்றம் அங்கிருந்தவர்களுக்கு பிரியாணி supply செய்ய உத்திரவு போட்டது ) அரசும் பேச்சு வார்த்தை நடத்தி தொழுகை பண்ண சென்றவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து. அவர்களை வெளியே (safe passage ) அனுப்புகிறோம் என்ற போர்வையில் உள்ளே தங்கி இருந்த பயங்கரவாதிகள் தப்பித்து சென்றுவிட்டனர். போகும்போது ஒரு ராணுவ Major General ஒருவரை கொன்றுவிட்டு தப்பித்து சென்று விட்டனர். அதற்குப்பின் தான் அங்கு AFSA மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு என்கவுண்டர் நடக்கிறது.உளூர் போலீஸ்க்கு இவர்களுக்கு துப்பு கொடுப்பது மட்டுமே வேலை.. 1999 இல் மசூத் அசார் விடுதலை 175 பயனியர்களின் உயிர் சம்பந்தப்பட்டது. அந்த மூன்று பேர்களுக்காக இவளவு பேர் பாதிக்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. இல்லையென்றால் 1984 இல் கராச்சியில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு ஏற்பட்ட கதிதான் நடந்திருக்கும். அதெற்குப்பின் ஒரு வலிமையான தலைமை இந்திய அரசில் ஏட்படாததே இவ்வளவுக்கும் காரணம். கூட்டணி தர்மத்திற்காக எவலோவோ விட்டு கொடுத்துதான் ஆட்சி நடைபெற்று வந்தது. அதன் வெளிப்பாடே தற்போதைய நிகழ்வுகள்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
19-பிப்-201903:05:39 IST Report Abuse
meenakshisundaram முன்பே Indira Gandhi காலத்தில் மேற்கு பாகிஸ்தான் (இப்போ வெறும் பாகிஸ்தான் ) இல் முன்னேறிய படைகள் திரும்ப பெறப்பட்ட நடவடிக்கை தவறோ ?அங்கேயிருந்து காஷிமிரை குல்லாக்காரர்கள் திரும்ப தரும் வரை இருந்திருந்தால்?கடைசியில் பாக் படைகள் சரணடைந்ததுமே Bhutto ஆதி பணிந்தான் முடிவில் அவனும் தூக்கிலும் அவர்களாலேயே கொல்லாப்பட்டான்.கிழக்கு வங்கத்தை துண்டித்தும் மதி கேட்ட பாக் அறிவே பெறவில்லைபெண்மணி இந்திராவோ உலகத்துக்கே தனது திறனை காட்டினார்,இன்று வரை 'பங்களா தேஷ் 'உதயமாக இருந்த இந்தியா வை எந்த ஒரு நாடும் குற்றம் சொன்னது இல்லை.ஒரே நாளில் சுதந்திரம் கொடுத்தும் அதை சரியாக பின்பற்றாத பாக் இன்று அளிம்பின் nuniyil உள்ளது.அதனை இரண்டாக உடைத்த காரணகர்த்தா பூட்டோ .இவன் ஒரு புஞ்சாபி முஸ்லீம்.இந்த துலுக்கர்கள் ஜனநாயக முறையில் தேர்தலில் வெற்றி பெற்ற வாங்க தேச துலுக்கரான ஷேய்க் முஜிபுர் ரஹ்மானை இரண்டாம் தர குடிமகனாகவே கருதி யதாலேயே இந்த நிலை ஏற்பட்டது.இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இதை உணரவேண்டும்.கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறான வழிகளில் உபயோகிப்பதால் ஏற்பட்ட தே இதுவாகும்.இந்தியாவோ இன்று விண்வெளிக்கு எள்ளும் நிலைக்கு முன்னேறியுள்ளது.அமெரிக்காவே வியந்து நோக்கும் அளவு சாதனைகளை படைத்தது வருகிறது.இந்தியர்கள் உலக அளவில் அறியப்படுகிறார்கள்.அவர்களோ இதை விட அதிகமாக தீவிரவாததாலேயே அறியப்பட்டுள்ளார்கள்.மற்றொரு பெண்மணியான பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் .இந்தியா .மற்றும்இஸ்ரேல் பிரதமர் போன்று செயல் அதட்டும் இன்னொரு சரித்திரம் படைப்போம் துரோகிகள் வெல்லப்பட வேண்டும்.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
18-பிப்-201921:20:33 IST Report Abuse
அம்பி ஐயர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரையும் மின்சாரத்தையும் நிறுத்தினாலேயே போதும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X