பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை குரோம்பேட்டை மற்றும் நன்மங்கலத்தில் சங்கராபுரம் ஸ்ரீ மஹாபெரியாவா சத்சங்கம்

Added : பிப் 18, 2019
Advertisement
ஸ்ரீ மஹாபெரியாவா சத்சங்கம்

பிப்ரவரி 16ம் தேதி குரோம்பேட்டை மற்றும் 17 ம் தேதி நன்மங்கலத்திலும் ஸ்ரீ சங்கராபுரம் என்கிற ஒரு நூதன வேத கிராமத்தைப்பற்றி சத்சங்கம் நடைபெற்றது.

நன்மங்கலத்தில் மாலை சங்கீதவித்வான் ஈணூ. ஆ. உமாசங்கர் தன் மாணவிகளுடன் நடத்திய இசை நிகழ்ச்சியுடன் சத்சங்கம் தொடங்கியது. இதில், ஸ்ரீ மஹா பெரியவா பிரதமை ஆன்மீக அன்பர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு சகல பூஜராதனைகளும் மிகவும் விமரிசையாக நடந்தது .

பிறகு மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் உருவாகிக்கொண்டு வரும் சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தை பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் ட்ரஸ்ட்டி கி.வெங்கடசுப்பிரமணியனின் விளக்க உரையும் இரண்டு நாட்களும் நடைபெற்றது .

தன்னுடைய அந்த உரையில் சங்கராபுரம் என்கிற வேத கிராமம் மிக பெரியளவில் உருவாகி கொண்டிருக்கும் விதத்தையும், காஞ்சி மாமுனி ஜகத்குரு 68 வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளும் அனைவராலும் பெரியவா என பயபக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு பிரமாண்டமான கோவிலும் , குளங்களும் , கோசாலையும் , 200 மாணவர்கள் படிக்கும்படியான வேத பாடசாலையும் , மேலும் 108 அக்னிஹோத்ரிகளின் கிரஹங்களும் நிர்மாணமாகி கொண்டு வருவத்தைப்பற்றியும் எடுத்துரைத்தார் .

மேலும் சங்கராபுரத்தின் வெவ்வேறு தற்போதய கட்டுமான பணிகளை பற்றியும் இந்த கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பினை பற்றியும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். அனைத்திடத்திலும் ஸ்ரீ மஹா பெரியவாளின் பிரதமைக்கு வேதபாராயணத்துடன் கூடிய பூஜராதனைகள் நடைப்பெற்றதை பக்தர்கள் பெருமளவில் கண்டு களித்தனர்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X