மஹாராஷ்டிராவில் பா.ஜ- சிவசேனா கூட்டணி முடிவானது

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 18, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement
மும்பை: லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ. - சிவசேனா கூட்டணி உறுதியானது. மஹாராஷ்டிராவில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் சிவசேனா இருந்தாலும் தொடர்ந்து மத்திய அரசை சிவசேனா விமர்சித்து வந்தது.இந்நிலையில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் இக்கூட்டணி தொடர பா.ஜ. முயற்சித்து வந்தது. இது தொடர்பாக பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா , சிவசேனா தலைவர் உத்தவ்
மஹாராஷ்டிராவில் பா.ஜ- சிவசேனா  கூட்டணி முடிவானது

மும்பை: லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ. - சிவசேனா கூட்டணி உறுதியானது.

மஹாராஷ்டிராவில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் சிவசேனா இருந்தாலும் தொடர்ந்து மத்திய அரசை சிவசேனா விமர்சித்து வந்தது.இந்நிலையில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் இக்கூட்டணி தொடர பா.ஜ. முயற்சித்து வந்தது. இது தொடர்பாக பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா , சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


latest tamil news


இந்நிலையில் இரு கட்சிகளிடையே கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன்படி மொத்தமுள்ள 48 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ. 25 தொகுதிகளிலும், சிவசேனா23 தொகுதிகளிலும் தொகுதி பங்கீட்டு செய்து கொள்வது எனவும் சட்டசபை தேர்தலில் 50-50 என போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி சிவசேனா தன் தனித்தன்மையைக் நிலை நாட்ட ஏதாவது அரசியல் செய்வார்கள். ஆனால் இந்துத்தவா ஆட்சிக்கு இடையூரு செய்வதில்லை. இப்போது பாஜக சிவசேனா கூட்டணி நன்றாக தான் மகாராஷ்டிராவில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றனர். இந்த தேச விரோத பாகிஸ்தான் ஆதரவு கான் கிராஸுக்கு சந்தர்ப்பம் ஒரு போதும் கொடுக்கக் கூடாது. தமிழகத்திலும் எடப்பாடி இதே நிலையை எடுத்துள்ளார்.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
19-பிப்-201909:00:08 IST Report Abuse
Viswam சீட்டுக்கு சன்டை போடுவது எல்லா மாநிலத்திலும் எல்லாக்கட்சிகளிலும் உண்டு. மாயாவதியும் அஃகிலேஷும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலைன்னா தேசிய எண்ணம் கிடையாது. ஆனா முப்பது வருஷத்துக்கு மேல கூட்டணியிலிருக்கிற ஆளுங்க வெளியில் சண்டை புடிக்கிறமாதிரி காமிச்சு ஒரு வழியா அக்ரீமெண்ட்டுக்கு வந்தா வடை போச்சேன்னு கூவல். அதுல தமிழ் தேசியவாத ஒப்பாரி வேற. சரி தமிழ் தேசியவாதம் எப்படின்னு பார்ப்போமா? தமிழ் தேசியவாதம் காங்கிரஸுடன் கூட்டுசேர்ந்து இலங்கை தமிழர்களை ஒருவழி செய்யும். கன்னட தேசியவாதம் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து காவிரியையும் தடுக்கும் தமிழர்களையும் அடிச்சு விரட்டும்போது தமிழ் தேசியவாதம் கண்ணை முடிக்கும். ஆந்திர தேசியவாதம் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தெலுகு கங்காவை காமிச்சு தண்ணி காட்டும், அப்பவும் தமிழ் தேசியவாதம் காதை முடிக்கும் . கேரளா தேசியவாதம் காங்கிரெஸ்ஸோட சப்போர்டுல முல்லை பெரியாரை வச்சு ஊடு கட்டும், அப்ப தமிழ் தேசியவாதம் ஜகா வாங்கும். அப்பவெல்லாம் போகாத புத்தி, புது தேசபக்தி, தமிழர்களுக்கு எதிரான கூட்டணி, ரொம்ப நல்ல கட்சின்னு நக்கலா இப்ப மட்டும் சவுண்ட் உடுதா?
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201908:10:34 IST Report Abuse
Srinivasan Kannaiya சந்தர்ப்பவாத கூட்டணி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X