ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்:புதிய துணைவேந்தர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்:புதிய துணைவேந்தர் தகவல்

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ஆராய்ச்சிக்கு, முக்கியத்துவம்,புதிய ,துணைவேந்தர், தகவல்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யின் புதிய துணைவேந்தராக பிச்சுமணி பொறுப்பேற்றுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெல்லை பல்கலை.,யில் முந்தைய துணைவேந்தர் பாஸ்கர் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.அனைத்து அடிப்படை வசதிகள், புதிய கட்டட வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தொடர் ஓட்டம் போல அவர் விட்ட இடத்தில் இருந்து பணிகளை தொடருவோம். பல்கலையின் வளர்ச்சிக்காக அவர் திட்டமிட்ட விஷன் 2030ஐ கணக்கில் கொண்டு முயற்சிகள் மேற்கொள்வோம். நெல்லை பல்கலை., தற்போது நாக் கமிட்டியின் 'ஏ' கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில் 'ஏ பிளஸ் பிளஸ்' அந்தஸ்துக்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். .
அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும். வேலைவாய்ப்புடன் கூடிய கல்விகள் ஏற்படுத்தப்படும். நெல்லை பல்கலை.,யில் வெளிநாட்டு மாணவர்கள் வந்து பயிலும் வகையில்,அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். பல்கலை.,யில் உள்ள அனைத்து துறைகளிலும் சகல வசதியுடன் கூடிய 'ஸ்மார்ட் வகுப்பறைகள்' துவக்கப்படும். அறிவியல் பிரிவு மாணவர்கள் மேற்கொள்வதைப்போல, கலைப்பிரிவு மாணவர்களும் 'புராஜக்ட்' மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். இதன் மூலம் கலைப்பிரிவு மாணவர்களுக்கும் ஆராய்ச்சியில் ஆர்வம் ஏற்படும்.இவ்வாறு துணைவேந்தர் கே. பிச்சுமணி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-பிப்-201901:15:33 IST Report Abuse
Bhaskaran முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள் ஐயா
Rate this:
Share this comment
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
19-பிப்-201900:06:41 IST Report Abuse
Subbanarasu Divakaran இந்த திரு பிச்சுமணி அவர்கள் நன்றாக முன்னேறட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X