பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வட்டியை குறைக்காதது ஏன்?
வங்கிகளை விசாரிக்க ஆர்.பி.ஐ., முடிவு

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, கடந்த வாரம், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டியை, 0.25 சதவீதம் குறைத்தது.ஆனால், இந்த வட்டி குறைப்பின் பயனை, வங்கிகள், அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் உள்ளன. அதாவது, தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு, வட்டியை குறைக்காமல் உள்ளன.

வட்டி,குறைக்காதது,ஏன்?எஸ்.பி.ஐ., உள்ளிட்ட, ஓரிரண்டு வங்கிகள் மட்டும், ரிசர்வ் வங்கி குறைத்த சதவீதத்தை முழுமையாக அளிக்காமல், ஓரளவு குறைத்துள்ளன. அதுவும், எஸ்.பி.ஐ., 0.05 சதவீத அளவிற்கே, வீட்டு வசதி கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது.இது, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறையினர், தனி நபர்கள் உள்ளிட்டோர் பயன் பெற வேண்டும் என்பதற்காக, வட்டியை குறைத்த, ரிசர்வ் வங்கிக்கு

எதிரான நிலைப்பாடாக கருதப்படுகிறது.


பயன் சேர வேண்டும்இது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், செய்தியாளர்களிடம் பேசியதாவது:ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டியைகுறைத்த உடன், வங்கிகள் அந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியது மிகவும் முக்கியம். இதை ஏற்கனவே, நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு பின், நான் தெரிவித்துள்ளேன்.


அதனால், இது குறித்து விவாதிக்க, பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன், வரும், 21ம் தேதி பேச்சு நடத்தப்படும்.தொழில் துறையில், 25 கோடி ரூபாய் வரை, கடன் நிலுவையில் உள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, ஏற்கனவே, கடன் மறுசீரமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இனி, இத்திட்டத்திற்கு தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்யும் பொறுப்பு, வங்கிகளிடம் தான்உள்ளது.கோட்டக் மகிந்திரா வங்கி விவகாரம், நீதிமன்றத்தில் உள்ளதால், கருத்து தெரிவிக்க முடியாது. யெஸ் பேங்க் பிரச்னை,

Advertisement

அவ்வங்கிக்கும், 'செபி'க்கும் இடையிலானது. இவ்வாறு அவர் பேசினார்.


இடைக்கால டிவிடெண்டுமத்திய நிதியமைச்சராக, அருண் ஜெட்லி மீண்டும் பொறுப்பேற்ற பின், நேற்று, ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டத்தில் பங்கேற்றார். பின், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:மத்திய அரசுக்கு, இடைக்கால, 'டிவிடெண்டு' வழங்குவது குறித்து, கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதை தீர்மானிக்கும் அதிகாரம், ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. இந்தியா போன்ற நாட்டிற்கு, சிறிய அளவில், வலிமையான பெரிய வங்கிகள் தான் தேவை.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிலையில், இடைக்கால டிவிடெண்டாக 28,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க இருப்பதாக, ஆர்.பி.ஐ., அறிவித்துள்ளது.Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-பிப்-201914:20:05 IST Report Abuse

Nallavan Nallavan2013 ஆம் ஆண்டு எனது பிக்சட் டெபாசிட் -க்கு குறைந்த பட்ச வட்டி 8.75 சதவிகிதம் இருந்த பொழுது வீட்டுக்கடன் வட்டி 10.10 சதவிகிதம் இருந்தது ...... இன்று 2019 இல் டெபாசிட் -க்கு குறைந்த பட்ச வட்டி 5.75 ஆகிவிட்டது ......அப்படிப் பார்த்தால் வீட்டுக்கடன் வட்டி அதிகபட்சம் 7.00 சதவிகிதம் வரை இருந்திருக்கலாம் ..... எனினும் 9.50 இருக்கிறது ...... வங்கிகளின், நிதியமைச்சகத்தின் நியாயமற்ற அணுகுமுறை ......

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
19-பிப்-201910:09:25 IST Report Abuse

தமிழ்மைந்தன் என்னமோ செய்யுங்க....ஆனா அறிவாலயத்தில் உள்ள பழைய ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை மாற்ற கால அவகாசம் கொடுப்பீங்களா அதை சொல்லுங்க முதலில்......

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-பிப்-201913:12:41 IST Report Abuse

தமிழ்வேல் ரெட்டிக்கு புது நோட்டு கத்தை கத்தையா குடுத்தவன்க இவனுவோளுக்கும் தரமாட்டாங்களா.. ...

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
19-பிப்-201909:46:45 IST Report Abuse

pattikkaattaan நான் கல்விக்கடனுக்கான வட்டிவிகிதம் அரசு வங்கிகளில் அதிகமாக இருக்கிறது என்று சென்றவாரம் எழுதியதற்கு என்னை சிலபேர் திட்டினார்கள்.. இப்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநரே வட்டியை குறைக்க சொல்லியிருக்கார் .. பார்க்கலாம் குறைப்பார்களா என்று ..

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
19-பிப்-201921:11:11 IST Report Abuse

அம்பி ஐயர்ஆஹா.... நன்றாகக் “குரை”ப்பார்கள்.... ...

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X