அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமெரிக்க கோர்ட்டில் வழக்கு:
தமிழகத்திற்கு உலக அரங்கில் அவமானம்


சென்னை: 'அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு, அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகத்திற்கு, உலக அரங்கில், அழிக்க முடியாத பெரும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகம்,உலக அரங்கு,அவமானம்

அவரது அறிக்கை:



சென்னையில் உள்ள, சி.டி.எஸ்., என்ற, 'காக்னிசன்ட் டெக்னாலஜி

சொல்யூஷன்ஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்,'கே.ஐ.டி.எஸ்., கேம்பஸ்' கட்டடம் கட்டுவதற்கும், சிறுசேரியில் கட்டட அனுமதி, மின்சார இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும், தமிழக அரசு அதிகாரிகளுக்கு, 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு, அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகத்திற்கு, உலக அரங்கில், அழிக்க முடியாத பெரும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


பெரும் பங்கு உண்டு



இந்த ஊழல் விவகாரத்தில், 2012 முதல்,2016 வரை, பதவியில் இருந்த, வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், மின் துறை அமைச்சர்களாக இருந்த விஸ்வநாதன், தங்கமணி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களாக இருந்த ரமணா, சம்பத், வெங்கடாசலம்,

Advertisement

கே.சி.கருப்பணன் ஆகியோருக்கு, நிச்சயம் பெரும் பங்கு உண்டு.தமிழக அரசின், லஞ்ச ஊழல் தடுப்புத் துறை, உடனே ஊழல் வழக்கு பதிவு செய்து, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஆதாரங்களை, தாமதமின்றி பெற வேண்டும். லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
19-பிப்-201920:10:04 IST Report Abuse

தமிழ்மைந்தன் திமுக மேல் சோதனை கூட நடத்தவில்லையா? அட கடவுளே......இவ்வளவு அடிமையாக இருக்க கூடாது நண்பரே.......அறிவாலயத்தில் 2ஜி, ஸ்டாலின் வீட்டில் வரி ஏய்ப்பு ஹம்மன் கார் சோதனை ,கனிமொழி சாராய ஆலையில் சோதனை.....எழுத இடம் இல்லை .....எனவே தங்களின் மேலான பார்வைக்கு.....

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
19-பிப்-201919:22:20 IST Report Abuse

r.sundaramசர்க்காரியா கமிசன் கண்டுபிடிப்புகள் வெளிவந்த உடனேயே தமிழக மானம் கப்பல் ஏறி விட்டது. ஆதலால் தமிழக மானம் போனது இது முதல் முறை அல்ல.

Rate this:
bal - chennai,இந்தியா
19-பிப்-201918:15:22 IST Report Abuse

balசிங்கப்பூர்ல கூவம் பேர் சொல்லி உங்கள் குடும்பம் நாறுது....ஒரு கேள்வி கேட்கிறேன்...இந்தியா சுதந்திரம் கிடைத்தபோது உங்கள் அப்பா கருணாநிதிக்கு 23 வயது கட்டிளம் காளை...ஒரு தடவையாவது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றாரா..ஆனால் மூச்சுக்கு மூணு தடவை பார்ப்பனரை திட்டும் இந்த திராவிடம் புரிந்துகொள்ளவேண்டும்...நிறைய பார்ப்பனர் குடும்பங்கள் சுதந்திர போராட்டத்தில் உயிர் விட்டது...பாரதியார் உட்பட...உங்கள் குடும்பம் ஒரு கொள்ளை குடும்பம்.

Rate this:
மேலும் 76 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X