பதிவு செய்த நாள் :
சுட்டு கொலை!
தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி...
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் பழிக்கு பழி

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், 40 வீரர்கள்உயிரிழப்புக்கு காரண மான தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டிய, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கம்ரன், பாதுகாப்பு படையினரால், சுட்டுக் கொல்லப்பட்டான்.பாதுகாப்பு படையைச் சேர்ந்த நான்கு வீரர்களும், இதில்உயிரிழந்தனர்.

தாக்குதல்,சதி திட்டம்,பயங்கரவாதி,சுட்டு கொலை, காஷ்மீர், பாதுகாப்பு படை வீரர்கள், பழிக்கு பழிஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனத்தின் மீது, சமீபத்தில், தற்கொலை படை தாக்குதல்நடத்தப்பட்டது.பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில், 40 வீரர்கள் உயிர்இழந்தனர்.


இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புல்வாமா மாவட்டம், பிங்லெனா பகுதியில், பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல்கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.மறைவிடத்தில் இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

நேற்றும் தொடர்ந்த இந்த துப்பாக்கிச் சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த, ஒரு மேஜர் உட்பட நான்கு, வீரர்கள்உயிரிழந்தனர். அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரும், போலீஸ்காரரும் இந்த சண்டையில்உயிரிழந்தனர்.இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில்

ஒருவனான, கம்ரன், பாகிஸ்தானைச் சேர்ந்தவன்.ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய லைவர்களில் ஒருவன்.


புல்வாமாவில், சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கான திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவன் இவன் என்று, பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.


300 மாணவர்கள் தஞ்சம்ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து, மற்ற மாநிலங்களில் தங்கி படிக்கும் காஷ்மீர் மாநில மாணவர்கள் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.இதையடுத்து, உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் தங்கி படித்த, காஷ்மீரைச் சேர்ந்த, 280 மாணவர்களும், ஹரியானா மாநிலம், அம்பாலாவில் தங்கி படித்த, 30 மாணவர்களும், பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


'அமைதி பஸ்' நிறுத்தம்புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலை அடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள, பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு, வாரம் ஒரு முறை இயக்கப்படும், 'அமைதி பஸ்' போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில், வாரம் நான்கு நாட்கள் நடக்கும் எல்லை தாண்டிய வர்த்தகமும் நிறுத்தப்பட்டுள்ளது.


பாக்., நடிகர்களுக்கு தடைஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலைஅடுத்து, இந்திய திரைப்படங்களில், பாக்., சினிமா நடிகர் - நடிகையர் நடிக்க, அகில இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் தடைவிதித்துள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான,

Advertisement

பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பையில் உள்ள, அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட
அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.


வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மனித நேயமற்ற இந்த தாக்குதலுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக, நாங்கள் என்றும் துணை நிற்போம்.இந்திய திரைப்படங்களில், பாக்., நடிகர் - நடிகையர் நடிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி, பாக்., கலைஞர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் தடை செய்யப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடரும் ஊரடங்கு உத்தரவுபுல்வாமாவில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, ஜம்மு - காஷ்மீரின் பல பகுதிகளில், போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களின் போது, வன் முறை சம்பவங்கள் நடந்ததால், ஜம்மு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், நான்காவது நாளாக நேற்று மாலையில், மூன்று மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப் பட்டிருந்தன; தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-பிப்-201920:32:40 IST Report Abuse

 nicolethomsonஅவனை சும்மா சுட்டு கொன்றது ? பன்றிகளின் அறையில் தங்க விட்டு , 72 நாட்கள் அவனை தற்கொலை பண்ண விடாமல் செய்திருந்தது சாகடித்திருக்க வேண்டும், அதனை லைவ் செய்திருக்க வேண்டும்,

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
19-பிப்-201911:06:14 IST Report Abuse

ganapati sbஇது முதல் அடியே இது போதாது இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூட்டி 370 ஐ ரத்து செயுங்கள் ராணுவத்தை அனுப்பி pok ஐ நம் வசமாக்குங்கள்

Rate this:
Manian - Chennai,இந்தியா
19-பிப்-201910:23:04 IST Report Abuse

Manianஅது சரி, நாம உளவாளிங்க ஏன் சிறப்பாக இல்லை? ஜாதி-மத-இட ஒதுக்கீடு வம்பா? தரையிலே ஆளு இல்லாம எதுவோ தெரிஞ்சுக்கிட முடியாதே . அப்பிலே எல்லை பக்கம் 25 மைல்களுக்கு ஊரை இருக்க விட கூடாது எல்லை புறம் வெடி வைக்கணும்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X