பணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
பணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது

மாலே, ஆசிய நாடான, மாலத்தீவில், பண மோசடி வழக்கில், முன்னாள் அதிபர், அப்துல்லா யாமீன் கைது செய்யப்பட்டார்.
கடந்த, 2013 முதல் ஐந்து ஆண்டுகள், அந்நாட்டு முற்போக்கு கட்சியைச் சேர்ந்த, அப்துல்லா யாமீன், மாலத்தீவு அதிபராக பதவி வகித்த போது, பல ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 2018, செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், யாமீன் தோல்வியடைந்தார். மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, இப்ராஹிம் முகமது சோலிஹ்


latest tamil news


அதிபரானார்.
அதை தொடர்ந்து, அதிபர் தேர்தலில் தோல்வியடைவதற்கு முன், ரூ.176 கோடி ஊழல் செய்ததாக, யாமீன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது; அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், யாமீனை கைது செய்யும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, யாமீனை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201908:09:53 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசியல்வாதியும் அத்திப்பழமும் ஒன்றுதான்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
19-பிப்-201904:37:56 IST Report Abuse
natarajan s அங்கு உள்ள நீதிமன்றங்களில் நீதிமான்கள் உள்ளனர் ஆனால் இங்குள்ள நீதிமன்றங்களில் நீதி ஆடுகள் உள்ளன அதனால்தான் முன் ஜாமீன் பின் ஜாமீன் என்று வழங்கி கொண்டே உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X