அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 தி.மு.க., அ.தி.மு.க.,சிறிய கட்சிகள்,பேரம்!

சென்னை:லோக்சபா தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம் பேசத் துவங்கி விட்டன. கேட்பதை தராவிட்டால் அணி மாற தயாராக இருப்பதாகவும் மிரட்டல் விடுக்கின்றன. 'சீட்' மட்டுமின்றி தேர்தல் செலவுக்கும் 'பெட்டி' கேட்டு சில கட்சிகள் நிர்பந்தம் செய்வதால் இரு கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி தொடர்கிறது.
லோக்சபா தேர்தலை சந்திக்க தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க., தலைமையில் ஒரு கூட்டணியும் அமைய உள்ளன. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ்; அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இணைவது மட்டும் உறுதியாகி உள்ளது.மேலும் ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க அணியில் இணைய முடிவு செய்துஉள்ளன. பா.ம.க., - தே.மு.தி.க., - புதிய தமிழகம் போன்ற கட்சிகள் அ.தி.மு.க.,வில் இணைய பேச்சு நடத்தியுள்ளன.தி.மு.க., கூட்டணியில் சேர பா.ம.க., தரப்பில் முதலில் பேச்சு நடந்தது. தி.மு.க., சார்பில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் முன்னின்று பேசினார்.பா.ம.க., சார்பில் ஆறு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் செவையும் தி.மு.க.,வே ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதை தி.மு.க., தலைமை ஏற்கவில்லை என்பதால் இழுபறி நீடிக்கிறது.
அதைத் தொடர்ந்து பா.ம.க. தன் பார்வையை அ.தி.மு.க., பக்கம் திருப்பியுள்ளது. இங்கும் புதுச்சேரி உள்ளிட்ட ஆறு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. செலவு விவகாரத்தைஓரளவுக்கு ஏற்றபோதிலும் புதுச்சேரி தொகுதியை அம்மாநில முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்., காங்கிரஸ் கேட்பதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.


அதனால் தமிழகத்தில் மட்டும் நான்கு தொகுதிகள் தர அ.தி.மு.க., முன்வந்துள்ளது. இதைஏற்க மறுத்த பா.ம.க., தற்போது 'புதுச்சேரியை ஒதுக்காவிட்டால் ஏழு தொகுதிகள் வேண்டும்' என 'டிமாண்ட்' வைத்துள்ளதாக தெரிகிறது.தே.மு.தி.க., தலைமை நேரடியாக அ.தி.மு.க.,வுடன் பேசாமல் பா.ஜ., வழியாக பேச்சு நடத்தியது. இக்கட்சிக்கான தேர்தல் செலவை பா.ஜ., ஏற்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதாக தெரிகிறது.மேலும் அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., சார்பில் ஐந்து தொகுதிகள் கேட்கப்பட்டன. மூன்று தொகுதிகளை வழங்க அ.தி.மு.க., முன்வந்துள்ளது. சேலம் தொகுதியை முதலில் தே.மு.தி.க., கேட்டுள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் அந்த தொகுதியை தர அ.தி.மு.க., மறுத்து விட்டது.
தற்போது கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு தே.மு.தி.க., அடம் பிடிக்கிறது. இத்தொகுதியில் விஜயகாந்த் மனைவிபிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஷ் போட்டியிட வாய்ப்புள்ளது. ஆனால் இத்தொகுதியையும் விட்டு தர அ.தி.மு.க., விரும்பவில்லை.அ.தி.மு.க., சார்பில் இத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி போட்டியிட விரும்புகிறார். அதேபோல் கரூர் தொகுதியை கைகழுவி தன் சொந்த மாவட்டமான இத்தொகுதியில் போட்டியிட லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் விரும்புகிறார்.

ஆனால் 'கிருஷ்ணகிரி தொகுதி கிடைத்தால் மட்டுமே கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும்' என சுதீஷ் கறாராக கூறிஉள்ளார்.இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுவது தாமதமாகி வருகிறது.இக்கூட்டணியில் இணைய புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவையும் விருப்பம் தெரிவித்துள்ளன. இவற்றுக்கு யார் ஒதுக்கீட்டில் 'சீட்' வழங்குவது, அவர்களுடைய தேர்தல் செலவை யார் ஏற்றுக் கொள்வது என்பதில் முடிவு ஏற்படாமல் உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இணைவது உறுதியாகி விட்டாலும் 'சீட்' ஒதுக்கீட்டில் சிக்கல்நீடிக்கிறது. அக்கட்சி இரட்டை இலக்கத்தில் 'சீட்' கேட்க தி.மு.க., தலைமையோ ஒற்றை இலக்கத்தில் நிற்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க., அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இக்கட்சி இரு தொகுதிகளை கேட்டு தி.மு.க., தலைமையிடம் பட்டியல் தந்துள்ளது. ஆனால் 'திருமாவளவனுக்கு மட்டுமே தொகுதி' என அறிவாலய வட்டாரம் கூறியுள்ளது. இதனால் இந்த கட்சியுடனான பேச்சும் இழுபறியில் தான் இருக்கிறது.
ம.தி.மு.க., தரப்பும் தி.மு.க.,வையே மலை போல் நம்பியிருக்கிறது. சமீப காலமாக தி.மு.க.,வின் ஊதுகுழலாகவே மாறி விட்ட ம.தி.மு.க.,

தலைமை மூன்று தொகுதிகளை கேட்டு காத்திருக்கிறது. எத்தனை தொகுதிகள் என்பதை தி.மு.க., மேலிடம் இன்னமும் உறுதி செய்யாததால் அறிவாலயத்திற்கு வெளியே நிற்கிறது.தி.மு.க.,வின் காத்திருப்போர் பட்டியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன. அவற்றுக்கான தொகுதிகளை முடிவு செய்துள்ள தி.மு.க., தலைமை கடைசி நேரத்தில் தான் அழைப்பு அனுப்பும் என தெரிகிறது.

இரு கூட்டணியிலும் பேச்சு நடத்தி வரும் கட்சிகளில் சில 'நாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் 'சீட்' தருவதோடு தேர்தல் செலவுக்கு பெரும் தொகையும் தர வேண்டும்; அல்லது மாற்று அணி தயாராக இருக்கிறது' என பேரம் பேசுகின்றன. தங்கள் கோரிக்கை ஏற்கப்படா விட்டால் மாற்று அணிக்கு சென்று விடுவதாகவும் இக்கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.
இதன் காரணமாக அ.தி.மு.க., - தி.மு.க., இரு தலைமையும் கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றன. இவ்விரு கட்சிகளிடம் பேரம் படியாமல் ஒதுங்கும் கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க அ.ம.மு.க., வலை விரித்து காத்திருக்கிறது.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sri - mumbai,இந்தியா
19-பிப்-201921:13:14 IST Report Abuse

sriஅணி மாறி என்னத்தை கிழிக்கப்போகிறார்கள்? மாற்று கூட்டணி இவர்களை வெத்திலை பாக்கு வைத்து வரவேற்க காத்திருப்பதுபோல பாவலா செய்து யாரை ஏமாற்ற முயற்ச்சி? எல்லாரும் விளைந்தவர்கள் பேசாமல் வாழை சுருட்டிக்கொண்டு கூட்டணிக்கு வேலை செய்தால் நாளை சட்டசபை தேர்தலில் ஒன்றிரண்டு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கும்

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
19-பிப்-201920:13:19 IST Report Abuse

தமிழ்மைந்தன் பெட்டி கட்சிகள்/ குழுக்கள் இனி பொட்டிபாம்பாய் அடங்கும்........தமிழகத்தில் இப்போதைக்கு அஇஅதிமுக,காங்கிரஸ், பாமக,பாஜக, தேமுதிக,திமுக போதும் ......

Rate this:
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
19-பிப்-201918:35:08 IST Report Abuse

Rajaiah Samuel Muthiahrajதினகரன் அணி தான் வருவதற்கு வாய்ப்பு உள்ளது போல தெரிகிறது கொள்ளையடித்தாலும் வெள்ளையாவது அடிப்பார்கள் மற்றவர்கள் கொள்ளை அடிப்பது மட்டுமே குறிக்கோள் என இருப்பதாகவே செயல்படுகிறது போலவே தெரியும்

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X