'அடித்தால் நடுங்கும் கோழை': மசூத் அசார் பற்றி அதிகாரி தகவல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'அடித்தால் நடுங்கும் கோழை'
மசூத் அசார் பற்றி அதிகாரி தகவல்

புதுடில்லி : 'கன்னத்தில் ஒரே ஒரு அறை விட்டதற்கே, பல உண்மைகளை கொட்டும் கோழை, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார்' என, விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

அடித்தால்,நடுங்கும்,கோழை,மசூத் அசார்,அதிகாரி,தகவல்


ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பாக்., ஆதரவு பெற்ற ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், சமீபத்தில் நடத்திய தற்கொலை தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவன்,


மசூத் அசாரை, 1994ல், காஷ்மீரில் ராணுவம் கைது செய்து, கோட் பல்வால் சிறையில் அடைத்தது.அங்கு, அவனிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.மசூத் அசாரிடம், காஷ்மீர் உளவு பிரிவின் தலைவராக அப்போது பதவியில் இருந்த, அவினாஷ் மோஹானனே தீவிர விசாரணை நடத்தினார். பின், வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து அவர் ஓய்வு பெற்றார்.மசூத் அசார் குறித்து, அவினாஷ் மோஷானனே, கூறியதாவது:மசூத் அசாரை சிறையில் சந்தித்து பல மணி நேரம் விசாரணை நடத்தினேன்.

அவன்,கையாள்வதற்கு எளிதானவன்; அடித்தால், நடுங்கும் கோழை; நிறைய தகவல்களை சொன்னான்.ராணுவ அதிகாரி ஒருவர், அவன்

Advertisement

கன்னத்தில் ஒரு அறை விட்டதும், பயத்தில் தகவல்களை கொட்டிக் கொண்டே இருந்தான். அப்போதுதான், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பற்றிய நிறைய தகவல்கள், உளவுத்துறைக்கு கிடைத்தன.இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த, 1999ல், பயணியர் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் பேரம் பேசினர். நுாற்றுக் கணக்கான பயணியரை காப்பாற்றுவதற்காக, அப்போது, மசூத் அசாரை, அரசு விடுவித்தது.


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-பிப்-201900:19:42 IST Report Abuse

Pugazh Vஇவனை கொல்லாமல் விட்டது வாஜ்பாய். சிறுபான்மை ஓட்டு களுக்காக அவர் இவனை விடுதலை செய்ய வில்லை. 148 பேருடன் கப்தஹாரில் இந்திய விமானத்தை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டி யதால் விட்டார். சிறுபான்மை ஓட்டாம்..விவரமே தெரியாமலேயே எழுதறதா?

Rate this:
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
19-பிப்-201911:24:24 IST Report Abuse

Enrum anbudanகேனப்பய மாதிரி இருப்பவனும் தொடை நடுங்கியும் இந்த மாதிரி மறைந்து இருந்து வேலை செய்வதில் கில்லாடிகளாய் இருப்பார்கள் அது நான் இப்பொழுது நடைமுறையில் கண்டது.

Rate this:
SUNA PAANA - Chennai,இந்தியா
19-பிப்-201909:55:57 IST Report Abuse

SUNA PAANAஜெயலலிதா தான் சரியான நபர். இந்த மாதிரி விஷயங்களை அவர் கையாளும் விதமே தனி

Rate this:
kuppusamy - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-201911:43:24 IST Report Abuse

kuppusamyஎன்ன செய்ய? இன்னைக்கு ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் அடுத்த பிரதமர் வேட்ப்பாளரே அவர் தான். சில நய வஞ்சகர்களும் காலமும் சேர்ந்து சதி செய்து விட்டது....

Rate this:
raja - Kanchipuram,இந்தியா
20-பிப்-201921:16:20 IST Report Abuse

rajaஎன்ன செய்தார்? விடுதலை புலிகள் விஷயத்தில் பல்டி அடித்தது நினைவில்லையா...

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X