'எலெக்ஷன்... கலெக்ஷன்!'

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 18, 2019
Advertisement
நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, குமரன் நினைவிடத்தில் நடந்ததால், சித்ராவும், மித்ராவும் அதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய பலரும், பாகிஸ்தான் தீவிரவாதிகளை, பூண்டோடு ஒழிக்க வேண்டுமென, ஆவேசமாக பேசிய வண்ணம் இருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும், நோட்டு, பேனா சகிதம் வந்த ஒருவர், அனைவரிடமும் முகவரி மற்றும்
 'எலெக்ஷன்... கலெக்ஷன்!'

நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, குமரன் நினைவிடத்தில் நடந்ததால், சித்ராவும், மித்ராவும் அதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய பலரும், பாகிஸ்தான் தீவிரவாதிகளை, பூண்டோடு ஒழிக்க வேண்டுமென, ஆவேசமாக பேசிய வண்ணம் இருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும், நோட்டு, பேனா சகிதம் வந்த ஒருவர், அனைவரிடமும் முகவரி மற்றும் மொபைல் எண் வாங்கி பதிவு செய்தார். இதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா... இந்த நிகழ்ச்சியில் போய், இப்படி பண்றாங்களே,''''சரியாக சொன்னாய். ஒரு வேளை அடுத்த முறை வேற ஏதாவது நிகழ்ச்சின்னா, இவங்களை தொடர்பு கொண்டு அழைக்கறதுக்காக கூட இருக்கலாம். எப்படிப்பார்த்தாலும், இதில வாங்குனது தப்புதான்,'' என்று மித்ராவின் கருத்தை ஆமோதித்து, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.மித்ராவும் உட்கார்ந்து கொண்டே, ''ஏக்கா... திருப்பூருக்கு, பெருமை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியின் பேர் வைத்த காலேஜில், ஒரு ஆபீசர், தன்னிஷ்டத்துக்கு, புரொபசர்களை சத்தம் போடுறாராம்,'' என்றாள்.''ஆமாண்டி. நானும் கேள்விப்பட்டேன். காலேஜில் அவர் வந்ததிலிருந்து, எல்லா, புரொபசர்களையும் கூப்பிட்டு, 'இங்க என்ன நடந்தாலும். என்னைய கேட்டுட்டுத்தான், மீடியாவுக்கு செய்தி கொடுக்கோணும். இல்லாட்டி, எங்கே சொல்லோணுமோ, அங்க சொல்லி, பார்த்துப்பேன்னு மிரட்டுறாராம்,''''போதாக்குறைக்கு, அவருக்கு, மேலிடமும் சப்போர்ட்டாம். தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாங்கிற கிராமத்து பழமொழி, இங்கேயும் பொருந்தி போகும்போல,'' என்றாள் சித்ரா.அப்போது, மித்ராவின் மொபைல் போன் ஒலிக்கவே, 'ஆன்' செய்து கோபமாக பேசிவிட்டு வைத்தாள்.''யார்கிட்ட.. இப்படி பேசறே?''''அக்கா... எங்க வீதியில் இருக்கற 'நிர்மல்ராஜின்' ஆட்டம் அதிகமாயிட்டே போகுது. அவர் எப்பப்பார்த்தாலும், ஏதாவது பிரச்னை பண்ணிட்டே இருக்கார். நாளைக்கு அப்பா வந்ததும், போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்திட வேண்டியதுதான்,'' என்றாள்.''ஆமாமா... அப்பதான் சரிபட்டு வருவாங்க. தொகுதிய முடிவு செய்றதுக்குள்ள, 'லோக்சபா' தேர்தல் வந்திடும்போல,'' என்றாள் சித்ரா.''அக்கா.. கூட்டணி பேச்சுவார்த்தைனா, அப்படி இப்படித்தான் இருக்கும்''''ஏய்... நான் சொல்ல வந்தது, 4வது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா மேட்டர். மாநகராட்சி மக்கள், 10 வருஷமா எதிர்பார்த்திருந்த மாதிரி, மேட்டுப்பாளையம் குடிநீர் கிடைக்கப்போகுது. அந்த விழாவை, 'சிட்டி'க்குள்ள நடத்தனும்னு, 'சவுத்' ஒருபக்கம் பேசறாரு,''''ஆனா.. ஜெ., வந்தபோது மீட்டிங் நடத்துன இடத்துல நடத்தனும்னு, 'நார்த்' சொல்றாரு. இப்படியே, இழுபறியாகுது,''''அக்கா.. நல்லா பார்த்துக்குங்க. வடக்குதொகுதியில இருக்கற கிராமத்துல குடிநீர் பஞ்சம் வரப்போகுது. அதனால, விழாவை வடக்கே நடத்திட்டா, லோக்சபா தேர்தல் தேரத்துல மக்களை சமாளிச்சுடலாம்னு, கட்சியிலயே பேசிக்கறாங்களாம்,''இருவரும் பேசி கொண்டே, மித்ராவின் வீட்டுக்கு வந்தனர். வண்டியை பார்க் செய்து விட்டு, இருவரும் உள்ளே சென்றனர். ''அம்மா... சூடா காபி குடும்மா.. தலை வலிக்குது,'' என்ற மித்ரா சோபாவில் அமர்ந்தாள்.சித்ராவும் உட்கார்ந்து கொண்டு, ''ஆளும்கட்சியில ஏதாச்சம் விேஷசம் இருக்காடி?'' என்றாள்.''ஆமாங்க்கா. ஜெ., பிறந்த நாள் கொண்டாட, ஆலோசனை கூட்டம் நடத்துனாங்களாம். ரொம்ப நாளைக்கு அப்புறமா, மூணுஎம்.எல்.ஏ.,களும் ஆஜரானதுதான் ைஹலைட்டாம். கூட்டத்திலிருந்து திடீர்னு அவைத்தலைவர் வெளியேறிட்டாராம்,''''ஏன்.. என்னாச்சு?''''இல்லக்கா.. அவருக்கு 'மைக்' கொடுக்கலையாம். அந்த கோபத்துலதான் போனாராம். இன்னொரு விஷயமும் நடந்தது கேளுங்க...''''ம்...ம்... சொல்லு. அப்பதானே தெரியும்''''மாஜிக்கு எதிராக, எம்.எல்.ஏ.,கள் தலைமையில கோஷ்டி உருவானதால, அவரை மாத்த சொல்லி, சி.எம்.,கிட்ட லெட்டர் கொடுக்கற அளவுக்கு போயிட்டாங்க. மறுபடியும், கட்சிக்காரங்கள இழுக்கனும்னு, மாஜிதான், ஐடியா செஞ்சு, தன்னோட மகன் கல்யாணத்துக்காக, வட்டம், சதுரம்னு எல்லோருக்கும், பட்டுவேட்டி, சட்டை எடுத்து கொடுத்திருக்காராம்.''''பதவியை காப்பாத்திக்க எப்படியெல்லாம், யோசிக்க வேண்டியிருக்கிறது பாரேன்,'' என்ற சித்ரா, ''என்னடி என்னமோ புகை 'ஸ்மெல்' வருது,'' என்றாள்.''அக்கா... பக்கத்தில ஒரு சிலர், குப்பைக்கு தீ வைச்சுடறாங்க. இதனால, புகை வருது. ஏக்கா. இதுக்கே இப்படின்னா, கலெக்டர் ஆபீசுக்கு போறவங்க, என்ன பாடு படறாங்க தெரியுமா?''''எங்க பார்த்தாலும், கிரஷர் மண்ண போட்டு வச்சிருக்காங்க, ஒவ்வொரு வண்டியும் போறப்ப, திடீர் சூறாவளி வந்த மாதிரி, புகை அடிக்குது; மூணு மாசமாச்சு, ஒரு பர்சன்டேஜ் கூட வேலையில முன்னேற்றம் இல்லாம போட்டு வச்சிருக்காங்க. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கொடுமைய அனுபவிக்றதுனு, அங்க வர்ற மக்களும், அலுவலர்களும் நொந்து நுாடுல்ஸ் ஆகறாங்க,'' என்று விளக்கினாள் மித்ரா.''ஏன்... மித்து. கூட்டுறவு தேர்தலை விட அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பம் வாங்குறது மோசமா போயிடுச்சாம்''''ஏங்க்கா.. அதில், என்ன மோசம்?''''இந்து சமய அறநிலையத்துறையில், அறங்காவலர் குழு அமைக்கிற தகவல் தெரிஞ்ச சிலர், பெருமாள் கோவிலுக்கு பக்கத்துல இருக்கற ஆபீசுக்கு போய் விண்ணப்பம் கேட்டாங்களாம். அதுக்கு ஆபீசில் இருந்த ஒருத்தரு, 'இங்க இல்லீங்க. சேலம் அல்லது தர்மபுரியில்தான் கெடைக்கும்னு, சொல்லியிருக்காங்க...''''ஆனா, இப்பவே வேணும்னு வாக்குவாதம் செஞ்சாங்களாம். சரி, பிரச்னை எதுக்குன்னு, இருந்த ஒரு 'பார்மை' காப்பி எடுத்து கொடுத்தாங்களாம்,'' என்றாள் சித்ரா.அதற்குள், மித்ராவின் அம்மா, காபி கொடுத்தார். இருவரும் குடித்து கொண்டே பேசினர்.''உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல் மும்முரமாக நடக்கிறதாமே,'' என்றாள் சித்ரா.''ஆமாம், நிதியாண்டு முடியறதால, துறைவாரியாக கணக்கு வழக்குகளை நிலுவையின்றி முடிக்கும் பணி பரபரப்பாக நடக்கும்போல...''''ஆயிரம் ரூபாய் கூட பெறாத லைட்டுகளுக்கு, 8 ஆயிரமும், எர்த் கம்பி அமைக்க 150 ஆகிற செலவுக்கு, 900 ரூபாயும் பில் போட்டு, பஞ்சாயத்தில் 'செக்' போட சொல்லியிருக்காங்க. அதிகாரிங்க சொல்லிட்டு போயிருவாங்க. ஆடிட்டிங்கில் விளக்கம் கேட்டால் என்ன செய்றதுனு, செக்ரட்டரிகள் தலையை பிச்சுக்கறாங்களாம்,''''அட... மித்து. உனக்கு இதுகூட தெரியாதா? அதிகாரிங்க ஆர்டர் போட்டுடுவாங்க. கடைசியில சிக்கிறதென்னவோ, செக்ரட்டரிதான்,'' என்று சொன்ன, சித்ரா, தண்ணீர் குடித்தாள்.''அக்கா... கஞ்சா விக்கிற ஒருத்தர், போலீசுக்கு தண்ணி காட்டுறாராம். உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா?''''ஆமாண்டி. பல்லடத்தில் இருந்து ஒருத்தர் டூவீலரில் வந்து 'சிட்டி' எல்லையான, வீரபாண்டியில், கஞ்சா வித்துட்டு போகிறார். இதை தெரிஞ்சுகிட்ட போலீசார், அவரை எப்படியாவது புடிச்சிடணும்னு, டிரை பண்ணாங்களாம்,''''மாட்டினாரா?''''இல்லப்பா... அந்நபரை பிடிக்க திட்டமிட்டால், தனக்கு யார் போன் பண்ணினாங்களோ, அவருக்கு 'சப்ளை' செஞ்சிட்டு எஸ்கேப் ஆயிடறாராம்,''''ஓேஹா... அப்ப, மொபைல் 'கஞ்சா' பிஸினஸ் பண்ணாறங்கன்னு சொல்லு,''''அக்கா... இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்னு ஆர்டர் வந்தவுடனேயே, லாட்டரி தலைதுாக்குதாமா?''''ஆமாம். சவுத் லிமிட்டில், பெரிய தோட்டத்தில்தான். 'தென்னிந்திய' அரசர் இருந்ததால், அடக்கி வாசிச்ச, லாட்டரி கும்பல், அவர் போனதும் குஷியாகி களத்தில் இறங்கிட்டாங்களாம். அவங்க மட்டுமல்ல, ஸ்டேஷனில் உள்ள சிலரும் ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டு, ஏரியாவை பிரிச்சுட்டாங்களாம்,''''என்ன கொடுமை சித்துாக்கா இது?''''கொடுமைதான் என்ன பண்ணச்சொல்ற. நேர்மையான அதிகாரிங்க கிடைக்கறதே பெரிசு. அதிலும், அடிக்கடி டிரான்ஸ்பர் ஆனால், இப்படித்தான். அதேமாதிரி திருப்பூரில், சட்ட விரோத சூதாட்ட கிளப் எங்கங்கே இருக்குதுங்கற, விவரத்தை உளவுத்துறை போலீசார் சேகரிச்சுட்டு வர்றாங்களாம்,''''இதையெல்லாம், மொத்தமா, கலெக்ட் பண்ணி, கமிஷனர்கிட்ட கொடுக்கறதுக்கா, இல்லாட்டி 'வைட்டமின்' வசூல் பண்ணவான்னு தெரியலை,''''என்னக்கா, இப்படி பண்றாங்களேக்கா? ஆமாங்க்கா... டிரான்ஸ்பர்னு சொன்னீங்களே. இந்த லிங்கேஸ்வரர் ஊரில், நம்ம 'சாமி' ஆபீசரை மாத்தலையாமா?''''ம்... ம்... உண்மைதான். இடையில் ஒருதடவை அவர் டிரான்ஸ்பர் ஆனதால, மாத்தலையாம்,''''அப்ப... எலக்ஷனிலும், நல்ல கலெக்ஷன் பார்த்திடுவாருன்னு, எல்லாரும் பேசிக்கிறாங்களாம்,'' என்று மித்ரா சொன்னதும்,''ஓ.கே.,ப்பா.. நான் கெளம்பறேன். அடுத்த வாரம், சிவன் ராத்திரிக்கு அவிநாசியில் இருக்கிற 'பரம'சிவன்கோவிலுக்கு போகோணும் மறந்திடாதே,'' என்று சொல்லி புறப்பட்டாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X