புல்வாமா தாக்குதல் சம்பவம் : வீரமணி கடும் கண்டனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

புல்வாமா தாக்குதல் சம்பவம் : வீரமணி கடும் கண்டனம்

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: 'கோழைத்தனமான தாக்குதல் மூலம், மனித உயிர்கள் பறிக்கப்படுவது, கடும் கண்டனத்துக்கு உரியது' என, புல்வாமா சம்பவம் குறித்து, தி.க., தலைவர், வீரமணி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடந்த, தற்கொலைப் படை தாக்குதலில், 40 வீரர்கள் பலியாகினர். இவர்களில் இருவர், தமிழகத்தைச் சேர்ந்த, சுப்ரமணியன், சிவசந்திரன் என்பது, மேலும் சோகத்துக்குரியது; அனைவருக்கும் வீரவணக்கம். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறோம்.மனித உயிர்கள், இப்படி கோழைத்தனமான தாக்குதல் மூலம் பறிக்கப்படுவது, கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த தாக்குதலுக்கு, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு, பொறுப்பேற்றுள்ளது. 'அண்டை நாட்டுடன் நல்லுறவு பேண வேண்டும்' என்ற இந்தியாவின் பெருந்தன்மையை, பாகிஸ்தான் அரசு, பலவீனமாக கருதக் கூடாது.நவீன அறிவியல் யுகத்தில் போர் என்பது, மனிதகுல அழிவுக்கே வழிவகுக்கும். அதனால், பிரச்னைகளை, நட்புறவு, நல்லெண்ணத்துடன் பேசி தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். ஐ.நா., போன்ற அமைப்புகள், வெறும் காட்சி பேச்சு அரங்குகளாக இல்லாமல், ஆக்கப்பூர்வ மனித உரிமை பேணும் அமைப்புகளாக, செயல்பட முன்வருவது அவசரம், அவசியம். நாட்டு பாதுகாப்பு பிரச்னையில், அரசியல் கண்ணோட்டத்திற்கு அறவே இடமில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
19-பிப்-201913:15:44 IST Report Abuse
Idithangi உடனடியாக சு ப வீ மற்றும் மதிமாறனை காசுமீருக்கு அனுப்பி பெரியார் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய சொல்லுங்க தலைவா . அப்புறம் பாருங்க அந்த மாநிலம் எப்படி மருதுன்னு.
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
19-பிப்-201910:55:31 IST Report Abuse
I love Bharatham தலைவா பயமுறுத்தாதே......உங்க சிறு பான்மையினர் கோச்சிக்க போறாங்க ....
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
19-பிப்-201907:21:59 IST Report Abuse
natarajan s 'அண்டை நாட்டுடன் நல்லுறவு பேண வேண்டும்'. இவங்களுக்கு நாட்டு பற்றே கிடையாதே இப்பொது என்ன திடீர் முழிப்பு. ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X