பொது செய்தி

தமிழ்நாடு

அறுவடை சீசனில் தேவையான இயந்திரங்கள்: குறைந்த வாடகையில் வழங்க வலியுறுத்தல்

Added : பிப் 18, 2019
Advertisement

உடுமலை:அறுவடை சீசனில், தேவையான இயந்திரங்களை, வேளாண் பொறியியல் துறை சார்பில், குறைந்த வாடகையில், அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத்தில், உடுமலை சுற்றுப்பகுதியில், ஒவ்வொரு சீசனிலும் பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, நெல், மக்காச்சோளம் மற்றும் தானியங்கள் சாகுபடி முக்கிய இடம் பிடிக்கிறது. மானாவாரியாக, கொண்டைக்கடலை, கொத்தமல்லி, சோளம் உட்பட தானியங்கள் சாகுபடியாகிறது. தற்போது, பல்வேறு காரணங்களால், விவசாய தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.மக்காச்சோளம் அறுவடைக்கு ஆண்டுதோறும் புதிய வகை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. முன்பு, மக்காச்சோள பயிரில் இருந்து கதிர்களை தொழிலாளர்கள் மூலம் பிரித்தெடுத்து, பின்னர், டிராக்டரில் பொருத்தப்படும் இயந்திரங்களால், கதிரிலுள்ள மணிகள் தனியாக பிரித்தெடுக்கப்படும்.தற்போதைய சீசனில், விளைநிலங்களில், நேரடியாக களமிறக்கப்படும் இயந்திரம், பயிர்களில் இருந்து கதிர்களை நேரடியாக பிரித்தெடுப்பதுடன், உலர் தீவனத்துக்கான தட்டுகளை, தனியாக பண்டல் போன்று கட்டி தருகிறது. இதனால், தொழிலாளர் தேவை வெகுவாக குறைகிறது. இதே போல், நெல் சாகுபடியில், நடவு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளும், இயந்திரத்தால் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, பல்வேறு புதிய இயந்திரங்கள் வேளாண் சாகுபடிக்கு உதவுகிறது. ஆனால், இயந்திரங்கள் தேவைக்காக, தனியாரை மட்டுமே, விவசாயிகள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: வேளாண் சாகுபடியில், இயந்திரமயமாக்கல் என்ற நோக்கத்துக்காக, வேளாண் பொறியியல் துறை செயல்படுகிறது. ஆனால், மானியத்திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இத்துறையிடம் உள்ள சில இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.ஒவ்வொரு சீசனிலும், தனியாரால், புதிய இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அறுவடைக்கு உதவியாக உள்ளது. வரும் காலங்களில், இயந்திர பயன்பாடு தவிர்க்க முடியாது.எனவே, வேளாண் பொறியியல் துறை சார்பில், வட்டார வாரியாக இயந்திரங்களை ஒதுக்கீடு செய்து, குறைந்த வாடகையில், பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X