பொது செய்தி

தமிழ்நாடு

கொண்டைக்கடலைகொள்முதல் விலை உயர்வு: போதிய விளைச்சல் இல்லாததால் கவலை

Added : பிப் 18, 2019
Advertisement

உடுமலை:போதிய விளைச்சல் இல்லாமல், சாகுபடி பாதித்த நிலையில், கொண்டைக்கடலை கொள்முதல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், மானாவாரியாக பருவமழையை அடிப்படையாகக்கொண்டு, கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. மழை மற்றும் பனிப்பொழிவு இச்சாகுபடிக்கு தேவையானதாகும். கடந்த சீசனில், விதைப்பு முடிந்ததும், வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யாத நிலையில், செடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.மேலும், ஈரப்பதம் மிக்க, பனிப்பொழிவு இல்லாமல், வறட்சியான மூடுபனியே இந்த சீசனில் இருந்தது. பூ பிடிக்கும் தருணத்தில், அதிக வேகத்தில், காற்று வீசியது. இவ்வாறு, பருவநிலை மாற்றத்தால், சாகுபடி முழுவதுமாக பாதிக்கப்பட்டது.ஏக்கருக்கு, 800 கிலோ என்ற விளைச்சல், நடப்பு சீசனில், 300 கிலோவாக குறைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த விளைச்சலும் இல்லை. இவ்வாறு, சாகுபடி கடுமையான பாதிப்பை சந்தித்த நிலையில், கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.கடந்தாண்டு, நுாறு கிலோ கொண்ட மூட்டை, 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது, மூட்டை, 6 ஆயிரம் ரூபாய் முதல் கொள்முதல் செய்யப்படுகிறது. விலை அதிகரித்தாலும், விளைச்சல் இல்லாததது விவசாயிகளை கவலையடையச்செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X