பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம் : இன்று, 'சரக்கு' கிடைக்குமா?

Added : பிப் 18, 2019
Advertisement

சென்னை: சம்பள உயர்வு கோரி, 'டாஸ்மாக்' ஊழியர்கள், இன்று காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். ஆனால், 'போராட்டத்தில் ஈடுபடுவோரின் சம்பளம், பிடித்தம் செய்யப்படும்' என, டாஸ்மாக் எச்சரித்து உள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் மதுக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், மது விலக்கு கால அட்டவணை வெளியிட வேண்டும்; அரசு துறையில் வேலை உட்பட, சில கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். சென்னை, எழும்பூரில் உள்ள, டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன், இப்போராட்டம் நடக்கிறது. இதனால், மதுக் கடைகளில், சரக்கு விற்பனை பாதிக்கப்படுமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.இது குறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறுகையில், 'பணிக்கு வராமல், போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, உயரதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். 'மதுக் கடைகள் வழக்கம் போல செயல்பட, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என்றார்.டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:எங்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. சம்பளத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகவே போராட்டம் நடத்தப்படுகிறது. சம்பளத்தை பிடித்தாலும் போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X